பன்னீருக்கும் எடப்பாடிக்கும் இடையே பனிப்போர் தொடருது. "ஆமாம் உண்மை தான்! பன்னீரைப் பொறுத்தவரை தமிழகம் முழுக்க எல்லா மாவட்டங்களிலும் உள்ள முக்கிய நிர்வாகிகள் அவரது ஆதரவாளராக இருக்க வேண்டும் என நினைக்கிறார். அப்போது தான் எதிர்காலத்தில் கட்சியில் ஏதாவது பிரச்னை என்றாலும் எல்லோரும் தன் பக்கம் வருவார்கள் என்பது பன்னீர் போட்டு வைத்துள்ள பக்காவான கணக்கு.

ஜெயலலிதாவின் மறைவை அடுத்து தனக்கென ஒரு அணியை உருவாக்கிக் கொண்ட பன்னீர், கொங்கு மண்டலம் எடப்பாடி கட்டுப்பாட்டில் இருப்பது போலத் தென் மாவட்டங்களைத் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வர நினைக்கிறார்.

ஆனால் எடப்பாடியோ, தென் மாவட்டங்களும் தான் சொல்வதை கேட்க வேண்டும் என நினைக்கிறார். அதனால்தான் தென் மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகளை வளைப்பதற்கான வேலையை பார்க்கிறார் சத்தமில்லாமல் களத்தில் ஒரு டீமை இறக்கியிருக்கிறார்.  அந்த டீமின் வேலை என்னன்னா? பன்னீர் எதிர்ப்பாளர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு பொறுப்பு வழங்குவதும், அவர்களின் தேவையை பூர்த்தி செய்வதுமாக வேகமாக கைகளை நகர்த்தி வருகிறதாம்.

எடப்பாடியின் இந்த கேம்களுக்கு சளைக்காமல் பன்னீர், எடப்பாடியாரின் பிளானை முறியடிக்க தனது ஆதரவாளர்களை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளாராம், எடப்பாடியாரைப் போல ஐவரும் ஒரு டீமை களத்தில் இறக்கியிருக்கிராராம்.