Asianet News TamilAsianet News Tamil

டெல்லியில் மூத்த வழக்கறிஞர்களுடன் இபிஎஸ் திடீர் ஆலோசனை! கொடநாடு வழக்கா? டெண்டர் முறைகேடு வழக்கா?

 டெல்லியில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் தங்கியிருக்கும் எடப்பாடி பழனிசாமி, சட்ட வல்லுனர்கள், மூத்த வழக்கறிஞர்களுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

Edappadi Palanisamy sudden consultation with senior lawyers in Delhi tvk
Author
First Published Sep 15, 2023, 7:51 AM IST

டெல்லி சென்றுள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மூத்த வழக்கறிஞர்களுடன் தனியார் விடுதியில் திடீரென ஆலோசனை நடத்திய சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் எப்படியாவது 3வது முறை ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என பாஜக தீவிரம் காட்டி வருகிறது. அதேநேரத்தில் எதிர்க்கட்சிகளான (இந்தியா கூட்டணி) ஒன்றிணைந்து பாஜக வீழ்த்திவிட வேண்டும் என முனைப்பு காட்டி வருகின்றனர். அண்மையில் நடந்த இடைத்தேர்தலில் எதிரணியினரின் இந்தியா கூட்டணி அமோக வெற்றி பெற்றது அவர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. வலுவாக உள்ள இந்தியா கூட்டணியை அமலாக்கத்துறை, வருமானவரித்துறை மூலம் மிரட்டி உடைக்கும் நடவடிக்கையை பாஜக தொடங்கியது.

இதையும் படிங்க;- குண்டு வெடிப்பு குறித்து இலங்கையையே அலர்ட் செய்தது அதிமுக.! 10 நாட்களில் 40 கொலை நடந்தது திமுக ஆட்சி- இபிஎஸ்

Edappadi Palanisamy sudden consultation with senior lawyers in Delhi tvk

இந்நிலையில், பாஜக கூட்டணி கட்சிகள் ஆலோசனை கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று காலை 10.45 மணிக்கு டெல்லி புறப்பட்டு சென்றார். அவருக்கு அதிமுக சார்பில் டெல்லியில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனையடுத்து  டெல்லியில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் தங்கியிருக்கும் எடப்பாடி பழனிசாமி, சட்ட வல்லுனர்கள், மூத்த வழக்கறிஞர்களுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

இதையும் படிங்க;-  ஜெயலலிதா பாணியில் இபிஎஸ்.. சொந்த தொகுதியிலேயே அதிரடி காட்டும் பொதுச்செயலாளர்..!

Edappadi Palanisamy sudden consultation with senior lawyers in Delhi tvk

டெண்டர் முறைகேடு வழக்கை மீண்டும் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. அதேபோல், கொடநாடு வழக்கில் இபிஎஸ்க்கு நெருக்குடி கொடுக்கும் வேலையில் திமுக இறங்கியுள்ளது. இதனால் ஏதாவது சிக்கல் ஏற்படுமா என்பது குறித்து வழக்கறிஞர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. பின்னர் நாடாளுமன்ற தேர்தல் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் நேற்று இரவு 8 மணியளவில் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார். 

Follow Us:
Download App:
  • android
  • ios