Asianet News TamilAsianet News Tamil

சிறப்பான சாலைகளை அமைக்கணும்னா உங்களோட நிலத்தை கொடுக்கணும்... முதல்வர் எடப்பாடி..!

சாலை திட்டங்களுக்காக மக்கள் மனம் உவந்து நிலம் அளிக்க முன்வர வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

edappadi palanisamy speech in salem
Author
Tamil Nadu, First Published Jul 21, 2019, 2:55 PM IST

சாலை திட்டங்களுக்காக மக்கள் மனம் உவந்து நிலம் அளிக்க முன்வர வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சேலம் மாவட்டம் தாரமங்கலத்தில் ரூ.24 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள 2 கிலோமீட்டர் புறவழிச்சாலையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். பின்னர் விழாவில் பேசிய அவர், இந்திய அளவில் தமிழகத்தின் உள்கட்டமைப்பு வசதிகள் மிகவும் சிறப்பாக உள்ளன. நாட்டிலேயே உள்கட்டமைப்பு வசதியில் தமிழகம் முதலிடத்தில் இருக்கிறது. தொழில் சிறக்கவும் சாலை மேம்பாடு மிகவும் முக்கியம் என்றார்.  edappadi palanisamy speech in salem

மேலும் அவர் பேசுகையில், போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த தேவைப்படும் இடங்களில் பாலங்கள், புறவழிச் சாலைகள் அமைக்க அதிமுக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக முதலமைச்சர் கூறினார். தமிழகத்தில் குடிமராத்துப்பணிகள் விவசாயிகளின் உதவியுடன் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. 

 edappadi palanisamy speech in salem

மக்கள் மனமுவந்து இடம் தந்ததால் தான் சிறப்பான சாலைகளை அமைக்க முடியும். ஓமலூர் - மேட்டூர் இடையே ரயில்வே மேம்பாலங்கள் விரைவில் கட்டப்படும் என்றும் அவர் உறுதியளித்தார். மேலும், சேலம் உருக்காலை வளாகத்தில், ராணுவ தளவாட உதிரிபாக உற்பத்தி தொழிற்சாலை அமைக்க நடவடிக்கை எடுத்து வருவதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். எவ்வளவு எதிர்ப்பு தெரிவித்தாலும் சாலைகளை அமைப்பது உறுதி என்பது போல் முதல்வரின் பேச்சு இருந்ததாக கூறப்படுகிறது. 

Follow Us:
Download App:
  • android
  • ios