Asianet News TamilAsianet News Tamil

"எல்லோரையும் மரியாதையோடு வரவேற்ற முதலமைச்சர்..!!" - பயத்தின் வெளிப்பாடா..?

edappadi palanisamy speech in college inauguration
edappadi palanisamy speech in college inauguration
Author
First Published Jun 9, 2017, 2:54 PM IST


புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி திறப்பு விழாவில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தனது உரையில் பங்கேற்ற அனைத்து அமைச்சர்களையும் மாண்புமிகு அமைச்சர்களே என்று ஒவ்வொருவர் பெயரையும் அழைத்து மரியாதையாக வரவேற்றது தன்னை விட்டு யாரும் போய்விடக் கூடாது என்ற பயம் காரணமாக இருக்கலாம் என கருதப்படுகிறது.

தமிழகத்தில் தினகரன் டெல்லி சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டதை அடுத்து, மீண்டும் கட்சிப் பணிகளில் ஈடுபடப் போவதாக அறிவித்தார். இதற்கு அமைச்சர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

edappadi palanisamy speech in college inauguration

இதையடுத்து தனியாக தினகரன் அணி என மூன்றாவது அணி ஒன்று உருவாகியுள்ளது. இந்நிலையில் 32 எம்எல்ஏக்கள் தினகரனை சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்தனர். அது மட்டுமலலாமல் அமைச்சர்கள் சிலரும், தினகரனை சந்திக்கப் போவதாக தெரிவித்து வருகின்றனர்.

இதனால் அரண்டு போன முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்களும், எம்எல்ஏக்களும் தன்னைவிட்டு சென்றுவிடுவார்களோ என பயந்து அவர்களை அரவணைத்துச் செல்ல முயற்சி மேற்கொண்டு வருகிறார்.

அதன் வெளிப்பாடுதான் எடப்பாடி பழனிசாமி, தொடர்ந்து அனைத்து எம்எல்ஏக்களையும் தனித்தனியாக சந்தித்துப் பேசினார்.அனைவரையும் தக்க வைத்துக் கொண்டால் தான் தனது பதவி நீடிக்கும் என்று கணக்குப் போட்டு செயல்பட்டு வருகிறார் என கூறப்படுகிறது.

edappadi palanisamy speech in college inauguration

இந்நிலையில் இன்று விழாவில் பேசிய எடப்பாடி, அங்கு வந்திருந்த அனைத்து அமைச்சர்களையும் மாண்புமிகு என அடைமொழியிட்டு வரவேற்றார். அவர் பேசும் போது இந்து அறநிலையத் துறை அமைச்சர் பெயரை சொல்ல மறந்து விட்டார். உடனே அருகில் இருந்த அமைச்சர் விஜய பாஸ்கர் அதை நினைவு படுத்த அவரையும் மாண்புமிகு என அழைத்து பெருமைப்படுத்தினார்.

இப்படி எடப்பாடி  பேசியது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினாலும், பயம் காரணமாகவே இப்படி பேசியதாக அங்குள்ளவர்கள் தெரிவித்தனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios