என்னை பொதுச்செயலாளராக அங்கீகரிக்க சொல்லி உத்தரவிடுங்க! ஸ்டைட்டா டெல்லிக்கே போன இபிஎஸ்! நாள் குறித்த நீதிமன்றம்
அதிமுகவின் புதிய விதிமுறைகளில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்களை அங்கீகரிக்க தலைமை தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும்.
அதிமுகவின் திருத்தப்பட்ட விதிகளை ஏற்று தேர்தல் ஆணையத்திற்கு உரிய உத்தரவை பிறப்பிக்க கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதிமுகவில் ஒற்றை தலைமை மோதல் காரணமாக ஓபிஎஸ்- இபிஎஸ் இடையே உச்சக்கட்ட மோதல் வெடித்தது. இதனையடுத்து, இருவரும் தனித்தனி அணியாக செயல்பட்டு வருகின்றனர். கடந்த ஆண்டு ஜூன் 11ம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். ஓ.பன்னீர்செல்வம் மற்றும் வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜேசிடி.பிரபாகர் உள்ளிட்டோர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.
இதையும் படிங்க;- அதிமுக பொதுச்செயலாளராக இபிஎஸ்-ஐ அங்கீகரிக்க கூடாது.. தேர்தல் ஆணையத்தில் பறந்த மனுவால் சிக்கல்.!
இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஓபிஎஸ் சட்டப்போரட்டம் நடத்தி வருகிறார். உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றம் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக தீர்ப்பு அளித்துள்ள நிலையில் ஓபிஎஸ் மேல்முறையீடு செய்தார். அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கும், பொதுச்செயலாளர் தேர்தலுக்கும் தடை விதிக்க மறுத்த சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து ஓபிஎஸ், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் மற்று ஜேசிடி.பிரபாகர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணையின் போது இடைக்காலமாக எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது எனக்கூறி ஓபிஎஸ் கோரிக்கையை நிராகரித்து வழக்கை ஒத்திவைத்தது.
இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் புதிய ஒன்று மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், அதிமுகவின் புதிய விதிமுறைகளில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்களை அங்கீகரிக்க தலைமை தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும். அதேபோன்று அதிமுகவின் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தாமதிக்காமல் அங்கீகரிக்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என தெரிவித்துள்ளார். இதையடுத்து இந்த மனு டெல்லி உயர்நீதிமன்றத்தில் வரும் திங்கட்கிழமை விசாரணைக்கு வருகிறது.
இதையும் படிங்க;- அதிமுக பொதுக்குழு வழக்கில் இடைக்கால உத்தரவு கேட்ட ஓபிஎஸ்..! நிராகரித்த நீதிபதிகள்.. நடந்தது என்ன?
ஏற்கனவே உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளில் தீர்ப்பு வரும் வரை அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரிக்க கூடாது என தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் தரப்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.