தமிழகத்தில் உள்ள வழிபாட்டு தலங்களை திறக்க தொடர்ந்து பலர் கோரிக்கை வைத்த நிலையில், சில நிபந்தனைகளுடன் வழிபாட்டு தலங்களை திறக்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அனுமதி அளித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு மே31ம் தேதி வரைக்கும் அமலில் உள்ளது. இதனால் கடந்த சில மாதங்களாக தமிழகம் முழுவதும் உள்ள இந்து கோவில்கள், மசூதிகள் மற்றும் சர்ச்கள் என அனைத்து வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டுள்ளன. 

இந்நிலையில், ஜூன் 1 முதல் தமிழகத்தில் முக்கியமான பெரிய கோவில்களை மட்டும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 40 ஆயிரம் கோவில்களிலும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் அனைத்து வழிபாட்டு தளங்களிலும் வழிபாட்டிற்கு செல்லும் பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கவும், முகக்கவசங்கள் அணிவதும் கட்டாயம் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.