சட்டப்பேரவை தேர்தல் தோல்வி, இனி அரசியல் ரீதியாக எப்படி செயல்வது என்பன போன்ற ஆலோசனைகள் இந்த கூட்டத்தில் நடைபெற்றது. சென்னையில் இருந்து ஓபிஎஸ் இந்த ஆலோசனையில் பங்கேற்கவில்லை. இதனால் மறுபடியும் ஓபிஎஸ் – இபிஎஸ் மோதல் என்று செய்திகள் பரவ ஆரம்பித்தன.
சென்னையில் நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்சை இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் தேடிச் சென்று சந்தித்து திரும்பியதற்கான காரணம் தெரியவந்துள்ளது.
சட்டப்பேரவை தேர்தல் முடிந்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டது முதலே ஓபிஎஸ் தேனியிலும் இபிஎஸ் சேலத்திலும் இருந்தனர். இந்த நிலையில் துணை முதலமைச்சராக இருந்த ஓபிஎஸ் சென்னையில் தங்கியிருந்த அரசு பங்களாவை காலி செய்ய திமுக அரசு உத்தரவிட்டது. இதனை அடுத்து சென்னையில் புதிதாக வீடு ஒன்றை பார்த்து ஓபிஎஸ் வாடகைக்கு சென்றுள்ளார். ஆனால் வீட்டில் சில மறுசீரமைப்பு மற்றும் புனரமைப்பு வேலைகள் பாக்கி இருந்தது. இதனால் சென்னை எழும்பூரில் உள்ள ரேடிசன் ப்ளு நட்சத்திர ஓட்டலில் ஓபிஎஸ் தங்கியிருந்தார்.

இதே போல் தேர்தலுக்கு பிறகு பெரும்பாலும் சேலத்திலேயே எடப்பாடி பழனிசாமி தங்கியிருந்தார். அங்கிருந்தபடியே அரசியல் தொடர்பான காய் நகர்த்தல்களையும் அவர் மேற்கொண்டு வந்தார். தேர்தல் வரை உடன் சேர்ந்து பயணித்த சுனில் டீமுடன் மீண்டும் சேர்ந்து பயணிப்பது தொடர்பான பேச்சுவார்த்தைகளை சேலத்திலேயே நடைபெற்றது. இந்த நிலையில் தான் கடந்த வாரம் திடீரென எடப்பாடி பழனிசாமி சென்னை வந்தார். அப்போது கட்சி அலுவலகம் சென்று அவர் சென்னை மாவட்டச் செயலாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

சட்டப்பேரவை தேர்தல் தோல்வி, இனி அரசியல் ரீதியாக எப்படி செயல்வது என்பன போன்ற ஆலோசனைகள் இந்த கூட்டத்தில் நடைபெற்றது. சென்னையில் இருந்து ஓபிஎஸ் இந்த ஆலோசனையில் பங்கேற்கவில்லை. இதனால் மறுபடியும் ஓபிஎஸ் – இபிஎஸ் மோதல் என்று செய்திகள் பரவ ஆரம்பித்தன. மேலும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் இல்லாமல் அப்படி என்ன ஆலோசனை நடைபெற்றது என்றும் கேள்விகள் எழுந்தன. இதனிடையே அதற்கு மறுநாளே நேராக ரேடிசன் ப்ளூ ஹோட்டலுக்கு சென்று எடப்பாடி பழனிசாமி ஓபிஎஸ்சை சந்தித்து பேசியுள்ளார்.

சந்திப்பின் போது அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பேசியது குறித்து எடப்பாடி பழனிசாமி ஓபிஎஸ்சிடம் எடுத்துரைத்ததாக கூறுகிறார்கள். மேலும் கூட்டத்தில் எடுக்கப்பட்ட ஒரு சில முடிவுகளை எடுத்துக்கூறி அதற்கு ஓபிஎஸ்சின் சம்மதத்தையும் எடப்பாடி பெற்றதாக சொல்கிறார்கள். அந்த வகையில் இருவரும் இணைந்து விரைவில் அரசியல் ரீதியாக சில நடவடிக்கைகளை தொடங்க உள்ளதாகவும், குறிப்பாக கொரோனா காலத்தில் திமுக அரசை அம்பலப்படுத்தும் வகையில் சில செயல்களில் இருவரும் ஒன்றிணைந்து ஈடபட உள்ளதாகவும் அதற்காகவே சந்திப்பு நடந்ததாகவும் கூறப்படுகிறது.
