மேகதாது அணைக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கக் கூடாது என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். 

முதல்வர் பழனிசாமி எழுதியிருக்கும் கடிதத்தில், காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் கர்நாடக அரசு அணை கட்ட திட்டமிட்டுள்ளது. ஆனால், காவிரியில் மேகதாது அணை கட்டும் முடிவானது உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது. எனவே, கர்நாடக அரசு மேகதாது அணை கட்ட மத்திய அரசு, சுற்றுச்சூழல் அனுமதி அளிக்கக் கூடாது என்றும், இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி நேரடியாகத் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.

 

மேலும், தமிழக அரசின் கருத்தைக் கேட்காமல் மேகதாது அணைக்கு மத்திய அரசு அனுமதி தரக் கூடாது என்றும், தமிழகம் உட்பட காவிரி ஆறு பாயும் மாநிலங்களின் கருத்துகளை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது. கர்நாடக அரசின் கோரிக்கையை சுற்றுச்சூழல் அமைச்சகம் நிராகரிக்க வேண்டும் எனவும் முதல்வர் பழனிசாமி கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.