கண்ணுக்குத் தெரியாத வைரஸ் எளிதாக ஒருவரிடம் இருந்து ஒருவருக்கு பரவும் என்பதை தொடர்ந்து கூறி வருகிறோம். அரசின் உத்தரவுகளை சரியாக பின் தொடர்ந்தால் கொரோனா பரவலை தடுக்க முடியும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். 

அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார். அப்போது, அவர் பேசுகையில் ஊரடங்கு தொடங்கியது முதல் அனைத்து ஆட்சியர்களும் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். கண்ணுக்குத் தெரியாத வைரஸ் எளிதாக ஒருவரிடம் இருந்து ஒருவருக்கு பரவும் என்பதை தொடர்ந்து கூறி வருகிறோம் அரசின் உத்தரவுகளை சரியாக பின் தொடர்ந்தால் கொரோனா பரவலை தடுக்க முடியும்.

தனிமனித இடைவெளி, மாஸ்க் அணிதல் போன்ற விதிமுறைகளை கடைப்பிடித்தால் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க முடியும். பொதுமக்கள் முழுமையான ஒத்துழைப்பு இருந்தால் தான் கொரோனா பரவலை முற்றிலுமாக தடுக்க முடியும். மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் அரசு செய்து வருகிறது. குறும்படங்கள், விளம்பரங்கள் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம். 

அத்தியாவசியபொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்கும்படி  ஏற்பாடு செய்து இருக்கிறோம் என முதல்வர் தகவல் தெரிவித்துள்ளார். பொதுமக்களுக்கு எந்தெந்த வகையில் உதவ முடியுமோ அந்தந்த வழிகளில் அரசு உதவியது. மே மாதத்தை போல ஜூன் மாதத்திலும் தமிழகத்தில் ரேஷன் பொருட்கள் மக்களுக்கு வழங்கப்படும் தமிழகத்தில் உணவு பஞ்சம் என்கிற பிரச்சனையே எழவில்லை என்று கூறினார். அம்மா உணவகம் மூலம் நாள் ஒன்றுக்கு 7 லட்சம் பேருக்கு உணவு அளிக்கப்படுகிறது. மக்கள் ஒத்துழைப்பு அளித்தால் மட்டுமே ஊரடங்கு தளர்த்தப்படும் என முதல்வர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மாநிலத்தில் இறப்பு விகிதம் 0.67 சதவீதம் உள்ளது. நாட்டிலேயே தமிழகத்தில் தான் குறைவு. 

மேலும், பேசிய முதல்வர் கொரோனா பாதிப்பு முதலில் உயர்ந்து பின்னர் குறையும் என கண்டறியப்பட்டுள்ளது. தமிழகம், இந்தியாவிலும் தற்போது உயர்ந்துள்ள கொரோனா பாதிப்பு பின்னர் குறைய வாய்ப்புள்ளது.  அதிக எண்ணிக்கையில் சோதனை செய்யப்படுவதால் அதிக பாதிப்பு தெரிகிறது. மருத்துவர்களின் தீவிர சிகிச்சையால் ஏராளமானோர் குணமடைந்துள்ளனர். குடிமாரமத்து திட்டம் கடந்த காலம்போல நடப்பு ஆண்டிலும் செயல்படுத்தப்படும். குடிமராமத்து பணிகளை உடனடியாக தொடங்க மாவட்ட ஆட்சியாளர்களுக்கு முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் வேலுமணி, விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர், சுகாதாரத்துறை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.