போராட்டம் அறிவித்த எடப்பாடியார்.! பயந்து மின்தடை அறிவித்த பயந்தாங்கோளி திமுக.! கோவை சத்யன் விளாசல்.!
தமிழகத்தில் ஆளுங்கட்சிக்கு எதிராகவும், மக்கள் பிரச்சனைக்கு ஆதரவாக அதிமுக குரல் கொடுத்து வருவகிறது. அவ்வப்போது போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி போராட்டம் அறிவித்ததில் பயந்து 9ம் தேதி அவிநாசி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின்தடை அறிவித்திருக்கும் பயந்தாங்கோளி திமுக என கோவை சத்யன் விமர்சனம் செய்துள்ளார்.
தமிழகத்தில் ஆளுங்கட்சிக்கு எதிராகவும், மக்கள் பிரச்சனைக்கு ஆதரவாக அதிமுக குரல் கொடுத்து வருவகிறது. அவ்வப்போது போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், எம்.ஜி.ஆரை விமர்சித்து பேசியதாக ஆ.ராசாவை கண்டித்து எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் வரும் 9ம் தேதி காலை 9 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கண்ட ஆர்ப்பாட்டத்தில் கோவை, நீலகிரி மற்றும் திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த தலைமைக் கழக செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் எம்ஜிஆர் அவர்களின் பக்தர்களும் பொதுமக்களும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
இதையும் படிங்க: BJP vs ADMK : பாஜகவில் இன்று இணையவுள்ள 14 மாஜி அதிமுக எம்எல்ஏக்கள் யார்.?யார்.? வெளியான பட்டியல்
இந்நிலையில், அதிமுக வரும் 9ம் தேதி வெள்ளிக்கிழமை அவிநாசியில் போராட்டம் அறிவித்திருந்த நிலையில் அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை அப்பகுதியில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பொம்மை முதல்வர் பயமா என அதிமுக தரப்பில் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அதிமுக ஐடிவிங் பிரிவைச் சேர்ந்த கோவை சத்யன் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: எடப்பாடியார் போராட்டம் அறிவித்ததில் பயந்து 9ம் தேதி அவிநாசி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின்தடை அறிவித்திருக்கும் பயந்தாங்கோளி திமுக. என்ன பொம்மை_முதல்வர் பயமா?? தொடைநடுங்கி_ஸ்டாலின் என கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதையும் படிங்க: அதிமுகவிற்காக பாஜகவின் கூட்டணி கதவுகள் திறந்துள்ளது.! விஜய் அரசியல் வருகையால் பாதிப்பா.? அமித்ஷா அதிரடி