கடந்த ஆண்டு சேலத்தில்  நடந்த அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் கூட்டத்திற்கு செய்தியாளர்கள் எவரும் அனுமதிக்கப்படவில்லை, அக்கூட்டத்தில் கலந்து கொண்ட யாரோ ஒருவர் முதல்வரின் பேச்சை ஆடியோ பதிவு செய்து வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினர். அதில் எடப்பாடி பழனிச்சாமி அரசு ஊழியர்களையும், அதிகாரிகளையும் முகத்திரையை மரணக் கிழி கிழித்திருந்தார். 

‘‘அரசு ஊழியர்கள் நல்லா சிந்தித்து பாருங்க. இன்று ஆரம்ப பள்ளியில் ஹெட்மாஸ்டர்களாக இருப்பவர்களுக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா? 82 ஆயிரம்  ரூபாய். ஐந்தாம் கிளாஸ் ஹெட்மாஸ்டருக்கு 82 ஆயிரம் ரூபாய். நம்ம பையன் பி.இ, கஷ்டப்பட்டு படித்து, பத்து வருடம் கழிந்தாலும் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் தாண்ட மாட்டான். இதேபோல் ஆசிரியர்களுக்கு 160 நாள் லீவு  கிடைக்கிறது.  எட்டாம் வகுப்புவரை படித்தாலும் சரி, படிக்காவிட்டாலும் சரி, பாஸ், பெயிலே கிடையாது. அப்படியே விட்டுருவான். இவ்வளவு பணத்தையும் வாங்கிக்கொண்டு போராட்டம் நடத்துகின்றனர்’’ என்று எடப்பாடி பழனிச்சாமி பேசியிருக்கிறார். மேலும் பல இடங்களில் அரசு ஊழியர்களையும், ஆசிரியர்களையும் மிகக்கடுமையாக பழனிச்சாமி தாறுமாறாக விமர்சனம் செய்திருந்தார். 

அப்படி இருக்கையில், தமிழக அரசு ஊழியர்கள்,  ஆசிரியர்கள் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி  சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ அமைப்பு கடந்த 22ம் தேதி முதல் தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறது. 

இந்நிலையில்,  போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்களை அரசு அடக்குவதோடு, காவல்துறை  கைது நடவடிக்கை எடுத்து வருகிறது.போராட்டத்தில் ஈடுபடும் அனைவரும் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இதற்கிடையே போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களுக்கு பதிலாக தற்காலிக ஆசிரியர்களை தேர்வு செய்து நியமனம் செய்ய பள்ளிக் கல்வித்துறைச் செயலாளர் பிரதீப் யாதவ் அரசாணை வெளியிட்டுள்ளார்.  அதன்படி தற்காலிக ஆசிரியர்கள் தேர்வு தொடங்கி வருகிறது. இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் தற்போது வெளியிட்டுள்ள வெளியானது.

ஆசிரியர்கள் நாளைக்கு பணிக்கு திரும்பினால் அவர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படாஅது. காலிப்பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள். உத்தேச காலி பணியிட பட்டியல் தயார் செய்யப்பட்டு தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதனை உறுதிப்படுத்தும் விதமாக, நாளை வேலைக்கு வராத ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி அதிரடியாக அறிவித்துள்ளார்.