Edappadi palanisamy and team very happy for rajinikanth reject BJP alliance
கடந்த சில நாட்களாக தமிழக அரசியலில் நடக்கும், கூட்டணி குஸ்தியில் குளிர் காய்ந்துகொண்டிருப்பது எடப்படியார் அண்ட் கோ தான். ஆமாம், டெல்லி பிஜேபியின் முக்கிய பொலிடிகல் அட்வைசர் ஒருவர் ரஜினியிடம் பேசியிருக்கிறார். அப்போது நடந்த சந்திப்பில் பிஜேபியின் மைன்ட்ல இருக்ற மொத்த விஷயத்தையும் நீங்க இம்ப்லீமென்ட் பண்ண காத்திருப்பது மேலிடத்திற்கு நல்லாவே தெரியுது. தமிழக அரசியல்ல உங்க கான்செப்ட் என்னன்னு நீங்கலே சொல்லிட்டிங்க அதெல்லாம் பிஜேபியின் நோக்கம்ன்னு உங்களுக்கு தெரியும் தானே.
.jpg)
அதனால, நீங்க நெனைக்கிற அரசியல ஸ்டார்ட் பண்ணுங்க, ஆனால் தமிழ்நாட்டில் நாம இணைந்து களத்தில் இறங்கினால் இங்கு இருக்கும் அரசியல் கட்சிகளை அலற வைக்கலாம். நீங்க சொன்னாலே போதும் நாடாளுமன்றத் தேர்தலுடன் சேர்த்து தமிழகத்தில் தேர்தல் கொண்டுவரோம். தேர்தல் சமயத்தில் கூட்டணி பற்றி பேசிப்போம். இப்போதைக்கு அதுபத்தி ஏதும் பேச வேண்டாம். நீங்க தேர்தல் செலவுகளைப் பற்றிக் கவலைப்படாதிங்க. அதை நாங்க பார்த்துக்குறோம். கூட்டணி பற்றி மட்டும் யோசிச்சு சொல்லுங்க...' என ரஜினியை ஃபிரைன் வாஷ் பண்ணியிருக்கிறார்கள்.
இதனையடுத்தே ரஜினி அமெரிக்கா போயிருக்கிறார், அப்போது இந்த டீல் விஷயமா ரொம்ப டீட்டேல் ஆஹ் அவருக்கு நெருக்கமானவர்களுடன் டிஷ்கர்ஷன் பண்ணியிருக்கிறார். அப்போது டிஷ்கர்ஷனில் இருந்த சில நண்பர்கள், 'பிஜேபியுடன் கூட்டணி வைப்பது என்பது சரியாக இருக்காது. இன்று ஒட்டுமொத்த தமிழ்நாடே பிஜேபி எதிர்ப்பு அலை வீசுது. மக்கள் கடுமையான கடுப்புல இருக்காங்க. சோ இந்த நேரத்துல பிஜேபியுடன் கூட்டணி என்று நினைக்காதீங்க. நாமலே கல்லை கட்டிகிட்டு கிணத்துல குதிக்கிற மாதிரி ஆகிடும் என சொல்ல ஒரு நிமிஷம் தலை சுத்தலில் விட்டுள்ளார்கள். இப்போதைக்கு இவங்க யாரும் வேண்டாம் என்பதால் தான் மக்கள் உங்களோட அரசியல் அறிவிப்பை எதிர்பார்த்து காத்துகிட்டு இருக்காங்க. அதனால ஒட்டுமொத்தமாக எதிர்ப்பை சம்பாதிச்சு வைத்து இருக்கும் ஒரு கட்சியோடு கூட்டணி வேணாம். இப்போதைக்கு அந்த முடிவுல தெளிவா உறுதியா இருக்கலாம். அப்போதான் நாம அடுத்த அடி இடி மாதிரி இறக்கி வைக்க முடியும். இல்லைன்னா முதல் அடியிலேயே நாம சறுக்கலை சந்திக்க வேண்டி இருக்கும்...' என செம்மதியான அட்வைஸ் கொடுத்திருக்கிறார்கள்.
.jpg)
நண்பர்களின் இந்த அட்வைசால் ரஜினியும் யோசிக்க ஆரம்பித்துவிட்டாராம். ஆனாலும் பிஜேபி விடுவதாக இல்லைன் அவர்களின் தரப்பில் இருக்கும் தமிழகத்தில் இருக்கும் பொலிடிகல் அட்வைசர் மூலம் தொடர்ந்து ரஜினிக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறதாம்.
ஆனால் ரஜினி பிடிகொடுக்கவில்லை. ரஜினி பிடிகொடுக்காமலேயே இருப்பது பிஜேபியின் மேலிடத் தலைவர்களுக்குச் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் அவர்களோ, 'ரஜினி கூட்டணிக்கு ஓகே சொன்னால் மட்டுமே நாடாளுமன்றத் தேர்தலுடன் சேர்த்துத் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலையும் நடத்தலாம். அப்படி இல்லை என்றால் இப்போ தமிழ்நாட்டுக்கு எலெக்ஷன் நடத்த வேண்டிய அவசியம் இல்ல...' என்று சொன்னார்களாம். ரஜினி இப்போது இருக்கும் மனநிலையில் பிஜேபியுடன் கூட்டணி இல்லை என்பதில் உறுதியாக இருக்கிறார்.
.jpg)
அதனால் எடப்பாடி ஆட்சிக்கு இப்போதைக்கு மோடியால் ஆபத்து இல்லை" ஆகவே இப்போதைக்கு ரஜினியின் இந்த முடிவால் எடப்பாடியார் அண்ட் கோ செம்ம குஷியில் இருக்கிறார்கள்.
