தன்னால செய்ய முடியாததை ஸ்டாலின் செஞ்சிட்டாரு என்று இபிஎஸ்-க்கு பொறாமை! தரமான பதிலடி கொடுத்த அமைச்சர் சக்கரபாணி
ர்க்கரையை எறும்பு தின்றது, சாக்கை கரையான் அரித்தது என்று ஒரு காலத்தில் கணக்கு காட்டியவர்கள், 7000 டன் நெல்லுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்? என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி இருந்தார்.
தருமபுரியில் 7 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் மாயம் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு குறித்து அமைச்சர் சக்கரபாணி விளக்கமளித்துள்ளார்.
ஒவ்வொரு நாளும் ஏமாற்றத்தை மட்டுமே தமிழக மக்களுக்கு பரிசளித்து வரும் இந்த விடியா திமுக ஆட்சியில், தற்போது தர்மபுரியில் அரசு குடோனில் வைத்திருந்த 7,000 டன் நெல் மாயமாகி உள்ளதாக செய்திதாள்களில் வருவது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. சர்க்கரையை எறும்பு தின்றது, சாக்கை கரையான் அரித்தது என்று ஒரு காலத்தில் கணக்கு காட்டியவர்கள், 7000 டன் நெல்லுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்? என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி இருந்தார். இந்நிலையில், எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டு அமைச்சர் சக்கரபாணி விளக்கமளித்துள்ளார்.
இதையும் படிங்க;- சர்க்கரையை எறும்பு தின்னுச்சு சொன்ன திமுக அரசு; 7 ஆயிரம் டன் நெல் மாயத்திற்கு என்ன சொல்ல போகுதோ? இபிஎஸ் சாடல்!
இதுதொடர்பாக உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி வெளியிட்டுள்ள அறிக்கையில்;- தர்மபுரி மாவட்டத்தில் வெற்றிலைக்காரன்பள்ளம் கிடங்கில் 22273 மெட்ரிக் டன் நெல் இருப்பு வைக்கப்பட்டிருந்தது. அதில் 7174 மெட்ரிக்டன் அரவைக்கு அனுப்பியது போக 15099 மெட்ரிக்டன் இருப்பு உள்ளது. இதிலிருந்து தான் 7000 டன் இருப்பில் இல்லை என்று இரு தரப்பினர் முரணாகக் கூறுவதாகக் கேள்விக்குறியுடன் செய்தி வந்ததைப் பார்த்தவுடனே தர்மபுரி மாவட்ட ஆட்சித்தலைவரையும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக மேலாண்மை இயக்குரையும் அந்தக் கிடங்கில் 100% தணிக்கை செய்து உண்மைத்தன்மையை அறிய ஏற்பாடு செய்திட ஆணையிட்டுள்ளேன்.
அதற்குள் அவசரப்பட்டு வெளிநாட்டு முதலீடுகளை உண்மையிலேயே ஈர்த்து வரும் நம் முதல்வர் மீதுள்ள காழ்ப்புணர்ச்சியின் காரணமாகவும் தன்னால் செய்ய முடியாத ஒன்றைச் செய்கிறாரே என்று பொறாமையின் உச்சகட்டத்தில் பத்திரிக்கையில் வந்த செய்தியை ஆராயாமல் வசவுகளை அள்ளித் தெளிக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி.
இதையும் படிங்க;- வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவதா.. இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள்.? திமுகவுக்கு எதிராக ஓபிஎஸ் சுளீர்
தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்கத் தயங்காது என அமைச்சர் சக்கரபாணி திட்டவட்டமாக கூறியுள்ளார்.