Asianet News TamilAsianet News Tamil

காமராஜரைப்போல நல்லாட்சி செய்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.. அடித்து தூக்கிய என்.ஆர் தனபாலன்.

234 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணிக்கு வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது எனவும், காமராஜரைப்போல எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி செய்து வருவதாகவும்  பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர் தனபாலன் தெரிவித்துள்ளார். 

Edappadi Palanichamy is doing good governance like Kamaraja .. NR Dhanapalan Says.
Author
Chennai, First Published Mar 18, 2021, 5:01 PM IST

234 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணிக்கு வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது எனவும், காமராஜரைப்போல எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி செய்து வருவதாகவும்  பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர் தனபாலன் தெரிவித்துள்ளார். சென்னை பெரம்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

Edappadi Palanichamy is doing good governance like Kamaraja .. NR Dhanapalan Says.

வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது, அதையொட்டி அரசியல் கட்சிகள் தேர்தலை சந்திப்பதற்கான பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன. அதிமுக தீமுக ஆகிய இரு கட்சிகளும் தேர்தல் அறிக்கை வெளியிட்டு, தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் அதிமுக கூட்டணியில் பெரம்பூர் தொகுதியில் களம்காணும் பெருந்தலைவர் மக்கள் கட்சியின் தலைவர் என்ஆர் தனபாலன், அத்தொகுதியில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். 

இந்நிலையில் இன்று, பெரம்பூர் சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதியில் வீதிவீதியாக சென்று பிரச்சாரம் மேற்கொண்டார். பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறயதாவது: அதிமுகவிற்கு 234 தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது, முதல்வர், துணை முதல்வரும் மக்களை எவ்வாறு முன்னேற்றுவது என்ற திட்டத்தை செயல்படுத்தி வருவகின்றனர். 

Edappadi Palanichamy is doing good governance like Kamaraja .. NR Dhanapalan Says.

காமராஜை போல் முதல்வர் ஆட்சி செய்து வருகிறார். 234 தொகுதியிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெறும், தான் சென்னையை சேர்ந்தவன் என்பதால் பெரம்பூர் தொகுதியை தேர்ந்தெடுத்ததாக கூறிய அவர், மக்கள் கூப்பிட்ட குரலுக்கு வர வேண்டும் என்ற எண்ணத்தில் தான் பெரம்பூர் தொகுதியை தேர்ந்தெடுத்ததாகவும் தெரிவித்தார். பெரம்பூர் தொகுதியை பொருத்தவரை சிறிய சிறிய பிரச்சனைகள் இருப்பதாகவும், அதை சரி செய்து விடலாம் எனவும் அவர் கூறினார். 

 

Follow Us:
Download App:
  • android
  • ios