பஜ்ஜியை கூட ஓசியில் பிடுங்கி சாப்பிடுறாங்க, ஓசி தேங்காய், பத்தி கேட்டு மிரட்டுவதாக திமுகவை கிழி கிழி என கிழித்து தொங்கவிட்டுள்ளார் எடப்பாடி பழனிச்சாமி.

பஜ்ஜியை கூட ஓசியில் பிடுங்கி சாப்பிடுறாங்க, ஓசி தேங்காய், பத்தி கேட்டு மிரட்டுவதாக திமுகவை கிழி கிழி என கிழித்து தொங்கவிட்டுள்ளார் எடப்பாடி பழனிச்சாமி.

வேலூர், திருப்பத்தூரில் கூட்டணிக் கட்சி வேட்பாளர் புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து வாக்கு சேகரிப்பின் போது பேசிய அவர்,  நாங்கள் ஆட்சியில் இருக்கும் போது அவர்களால் எப்படி விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய முடியும்.தி.மு.க. எதிர்கட்சியாக இருக்கும் போதே பல இடங்களில் ரவுடித்தனம் அடாவடி செய்து வருகின்றனர். 

திருவண்ணாமலை கோவில் முன்புள்ள கடைகளில் ஓசி தேங்காய், பத்தி கேட்டு மிரட்டுகின்றனர். பஜ்ஜியை கூட ஓசியில் பிடுங்கி சாப்பிடுகின்றனர்.

இப்போதே ரவுடி ராஜ்யத்தை ஆரம்பித்து விட்டனர். எதிர்கட்சியாக இருக்கும் போதே ரவுடித்தனம் செய்யும் திமுகவினர் ஆட்சிக்கு வந்தால் தமிழகம் தாங்காது. திமுக ரவுடி ராஜ்யத்துக்கு அதிமுக அரசு உரிய நடவடிக்கை எடுக்கும். திமுக ஆட்சியில் நில அபகரிப்பு அதிகமாக இருந்தது. சுடுகாட்டை கூட அவர்கள் விட்டு வைக்கவில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு நிலத்தை மீட்டு கொடுத்தது அதிமுக ஆட்சியில் தான் எனக் கூறியுள்ளார்.