edappadi didnt alert vijayabaskar about raid
அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டுக்கு, எப்போது வருமான வரி துறையினர் ரைடு நடத்த வருகிறார்கள் என்பது முதல்வர் எடப்பாடிக்கு முன்கூட்டியே தெரிந்திருந்தும், அவர் உஷார் படுத்தவில்லை என்று கூறப்படுகிறது.
தினகரனுக்கு வலது காரமாகவும், தளபதியாகவும் வலம் வரும் விஜயபாஸ்கர், முதல்வர் உள்பட எந்த அமைச்சரையும் மதிப்பதில்லை.
பன்னீர் முதல்வராக இருந்தபோதும், சசிகலாவிடம் உள்ள நெருக்கம் காரணமாக, அவரையும் மதிக்காமல் செயல்பட்டார் விஜயபாஸ்கர். இதை பன்னீரே சில பேட்டிகளில் கூறி இருக்கிறார்.

அதனால், முதல்வர் எடப்பாடி உள்பட மற்ற அமைச்சர்களும் விஜயபாஸ்கர் மேல் கடும் கோபத்தில் இருந்துள்ளனர்.
இந்நிலையில்தான், பன்னீர் தரப்பினர், மத்திய அமைச்சர் ஒருவரிடம் போட்டு கொடுத்து, விஜயபாஸ்கர் வீட்டில் ரைடு நடத்த ஏற்பாடு செய்துள்ளனர்.
இதை விஜயபாஸ்கர் எப்படியோ கண்டுபிடித்து விட்டார். ஆனால், வருமான வரி துறையினர், எப்போது ரெய்டுக்கு வருகிறார்கள் என்ற தகவல் முதல்வர் எடப்பாடிக்கு முன் கூட்டியே தெரியும்.

அப்படி இருந்தும், முதல்வர் எடப்பாடி, அதை சொல்லி, விஜயபாஸ்கரை உஷார் படுத்தாமல் விட்டு விட்டார் என்று கூறப்படுகிறது.
ஆர்.கே.நகரில் தினகரன் ஜெயித்து விட்டால், தமது முதல்வர் பதவிக்கு ஆபத்து என்று ஏற்கனவே, தமக்கு நெருக்கமான பலரிடம் கூறி வருகிறார் முதல்வர் எடப்பாடி.
எனவே, கோடி கோடியாக செலவு செய்து வரும் தினகரன் எப்படியாவது, ஆர்.கே.நகரில் ஜெயித்து விடுவார் என்றே அவர் நினைக்கிறார்.

எனவே, பண விநியோகத்தை காரணம் காட்டி தேர்தல் நிறுத்தப்பட்டால், அடுத்து தேர்தல் வர சில மாதங்கள் ஆகும். அதுவரை முதல்வர் பதவியை யாரும் நெருங்க முடியாது என்பது அவரின் கணக்கு.
மேலும், முதல்வரான தம்மையும், சக அமைச்சர்களையும் கொஞ்சமும் மதிக்காத, விஜயபாஸ்கருக்கு ஒரு பாடம் கற்பிக்க வேண்டும் என்றும் முதல்வர் விரும்பி இருக்கிறார்.
அதன் காரணமாகவே, வருமான வரி துறையினர் எப்போது ரைடு வர போகிறார்கள் என்பதை முன் கூட்டியே அறிந்திருந்தும், அதை விஜயபாஸ்கரிடம் சொல்லி உஷார் படுத்தாமல் விட்டுவிட்டார் முதல்வர் என்று அதிமுக வினரே கூறுகின்றனர்.
