கொங்கு மண்டலத்தில் கோவையைத் தாண்டி பிஜேபி. மேலும் சில சீட்டுகளைக் கேட்டாங்க, அது எங்க கோட்டைன்னு தரமறுத்தோம். ஆனா, அங்க நம்மளோட வாக்கு வங்கி சரிந்துவிட்டது.  உங்க மகனை அடக்கிவைக்கத் தெரியலை. உங்க மகனால் மொத்த சாம்ராஜ்யமே அழிஞ்சி போச்சு என பொள்ளாச்சி ஜெயராமனை பல்வலியிலும் பயங்கர காட்டு கட்டிட்டாராம் எடப்பாடி. 

நடந்து முடிந்த தேர்தலில் அதிமுக ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள தேவையான தொகுதிகளை கைப்பற்றியது. நாடாளுமன்றத் தேர்தலில் பன்னீர் மகனைத் தவிர மொத்தமும் காலியானது. வாக்கு சதவிகிதம் அதலபாதாளத்தில் சரிந்தது. அதிலும் அதிமுகவின் கோட்டையான கொங்கு மண்டலமே முதலில் காலியானது. இது அதிமுக வரலாற்றில் நினைத்துப் பார்க்கமுடியாத சம்பவமாக மாறியது. இதற்கு காரணம்  பொள்ளாச்சி பாலியல் மேட்டர் தான், இந்த குற்றச்சம்பவத்தின் பின்னணியில் அதிமுகவினர் மீதான சந்தேகங்களும் புகார்களும் நாளுக்கு நாள் வலுக்கத் தொடங்கின. 

முதலில் சிக்கியது என்னவோ பார் நாகராஜன் தான், இதனைத் தொடர்ந்து நடந்த விசாரணையில், அதிமுக சீனியர் தலைவர்களில் ஒருவரும், தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகருமான பொள்ளாச்சி ஜெயராமனின் மகன்களுக்கும் இந்த ஆபாச வீடியோ கும்பலுக்கும் தொடர்பு இருப்பதாகத் தகவல் பரவியதும் அதிமுக மீதான மொத்த இமேஜும், டேமேஜ் ஆனது, அதுவும் தேர்தல் நெருங்கி கொண்டிருந்த சமயம் என்பதால், அது ரிசல்டில் வெளிப்பட்டது.  

இந்நிலையில், அதிமுகவில் கோட்டையாக இருந்த கொங்குமண்டலமே வாஷ் அவுட் ஆனதால் ஜீரணிக்க முடியாமல் கதைகலங்கிப் போயுள்ளனர் முக்கிய அமைச்சர்கள், இந்நிலையில் சமீபத்தில் நடந்த எம்எல்ஏக்கள் ஆலோசனை கூட்டத்தில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனை, பல்வலியால் அவதிப்பட்டிருக்கும் இந்த நேரத்திலும் பொரிந்து தள்ளி விட்டாராம் எடப்பாடி. அந்த கூட்டத்தில் உங்களால் தான் அதிமுக. கோட்டையான கொங்கு மண்டலமே நமக்கு எதிரா நிக்கிது, அதுக்கு காரணமே நீங்க தான்.

கொங்கு மண்டலத்தில் கோவையைத் தாண்டி பிஜேபி. மேலும், 1 சீட் கேட்டாங்க, அது நம்ம கோட்டைன்னு தரமறுத்தோம். ஆனா, அங்க ஏற்கனவே வச்சிருந்த வாக்கு வங்கி சரிந்துவிட்டது.  உங்க மகனை அடக்கிவைக்கத் தெரியலை. உங்க மகனால் மொத்த சாம்ராஜ்யமே அழிஞ்சி போச்சு.

இப்போ பாருங்க, கொங்கு கவுண்டர் சமூகப் பெண்கள் எல்லோரும் அதிமுகவுக்கு எதிரா ஆயிட்டாங்க. அதே போல் இரட்டை இலைக்கே தொடர்ந்து ஓட்டுப் போடும் அருந்ததியர் சமூக மக்களும் நமக்கு ஓட்டுப் போடலை. அதுமட்டுமா? தேர்தல் நேரத்தில் பிரச்சாரக் கூட்ட மேடையில், உங்க இன்னொரு மகனையும் ஏத்தி மக்களின் கோபத்தைச் சம்பாதிச்சிட்டீங்க. இப்ப பொள்ளாச்சி விவகாரத்தை சிபிஐ தீவிரமா தோண்டுது. ஒரு வேளை உங்க மகனை சிபிஐ கைது செஞ்சா, உதவின்னு எங்கிட்ட வராதீங்கன்னு என பயங்கர கத்து கத்திவிட்டாராம் எடப்பாடி.