குமாரை தூக்கிய பேச்சி முத்து மகன்... ஓ.பி.எஸ் போட்ட கண்டிஷனுக்கு ஒத்துக் கொண்ட எடப்பாடி..!
தன்னை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்றும் எடப்பாடியார் தரப்பில் நிபந்தனை விதிக்கப்பட்டதாக அரசியல் வட்டாரங்களுக்குள் பேசி கொள்ளப்படுகிறது.
தேனி மாவட்டத்தின் மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஓ பி ரவீந்தரநாத். தமிழகத்தில் இருந்து அதிமுக சார்பாக டெல்லிக்கு சென்றிருக்கும் ஒரே ஒரு மக்களவை உறுப்பினர் இவர். பாஜக அரசு எந்த மசோதா கொண்டு வந்தாலும் தமிழ்நாட்டில் இருந்து கிடைக்கும் ஒரே ஒரு ஆதரவுக் குரல் இவருடையதுதான்.
இந்நிலையில், ரவீந்திரநாத் தனது பெயரை நியூமராலஜிபடி மாற்றியுள்ளார். P.Raveendranath Kumar என்று இருந்த பெயரை eஐ கட் பண்ணிவிட்டு P Ravindhranath என ஒரு iயும் கூடவே Hம் சேர்த்து உள்ளார். குமாரை மொத்தமாக தூக்கி விட்டார்.இவரது தந்தை ஓ.பன்னீர்செல்வம், 30 ஆண்டுகளுக்கு முன் பேச்சி முத்து என்ற தனது இயற்பெயரை பன்னீர்செல்வமாக மாற்றிக் கொண்டார். அதன் பிறகே அரசியலில் கோலோச்சத் தொடங்கினார்.
அப்படி ரவீந்திரநாத் தனது பெயரை மாற்றிக் கொண்டதாலோ என்னவோ ஒ.பி.எஸ் கோரிக்கை விடுத்து வந்த கட்சிக்கு வழிகாட்டும் 11 பேர் கொண்ட குழுவை அமைக்க ஒப்புக்கொள்வதாகவும், பதிலாக தன்னை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்றும் எடப்பாடியார் தரப்பில் நிபந்தனை விதிக்கப்பட்டதாக அரசியல் வட்டாரங்களுக்குள் பேசி கொள்ளப்படுகிறது.
ஆக, மொத்தத்தில்குமாரை தூக்கி விட்டு தனது பெயரை மாற்றிக் கொண்டதால் அவரது தந்தையில் கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளதாக அவரது ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்.