2021 இல் அதிமுக தான் மீண்டும் ஆட்சி..! இப்போதே எடப்பாடி அதிரடி..! 

மக்களவை தேர்தலில் திமுக வெற்றி பெற்று இருந்தாலும் வரும் 2021 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் மீண்டும் அதிமுக ஆட்சியைப் பிடிக்கும் என இன்று சட்டப்பேரவையில் நடைபெற்ற மானிய கோரிக்கை மீதான விவாதத்தின்போது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்து இருந்தார்.

அப்போது பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, 2021 இதில் அதிமுக அரசுதான் மீண்டும் ஆட்சிக்கு வரும், திமுகவினர் எப்படி மக்களை ஏமாற்றி வெற்றி பெற்றுள்ளனர் என்பது தெரியும்... நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அள்ளி தந்து திமுக வெற்றி பெற்றுள்ளது... ஆட்சிக்கு வர மறைமுகமாக எப்படி திட்டம் போட்டார்கள் என அனைவருக்கும் தெரியும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்து இருந்தார் 

மேலும், ஆர் கே நகரில் டெபாசிட் கூட வாங்க முடியாத திமுக இப்போது எப்படி வெற்றி பெற்றது என்றும் கேள்வி எழுப்பினார். இதற்கு முன்னதாக, "விரைவில் திமுக ஆட்சிக்கு வரும்.. வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம்" என ஸ்டாலின் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.