கனமழை, வெள்ளம், இடிபாடுகளில் சிக்கிய நீலகிரி மாவட்டத்தில் உயிரிழந்த 5 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூபாய் 10 லட்சம் நிதி உதவி வழங்க உத்தரவு பிறப்பித்து உள்ளார் முதலவர் எடப்பாடி பழனிசாமி

மேலும், நீலகிரிக்கு சென்று மீட்பு நிவாரண பணிகளை மேற்கொள்ள அமைச்சர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்து உள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அவலாஞ்சியில்  இருப்பவருக்கு உதவி செய்ய பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. நீலகிரியில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரையும் 28 பேரிடர் மீட்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

தென்மேற்கு பருவ மழையினால் கடந்த 76 ஆண்டுகள் இல்லாத அளவில் 919 மில்லி மீட்டர் மழை பதிவாகி புதிய ரெக்கார்ட் படைத்துள்ளது

தொடர்ந்து பெய்து வந்த கனமழை மற்றும் இடிபாடுகளில் சிக்கி நீலகிரியில் இதுவரை 5 பேர் பலியாகி உள்ளனர். மேலும் நிலச்சரிவில் பல பேர் சிக்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கிடையில் அடுத்து வரும் இரண்டு நாட்களுக்கு மிக மிக கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை எச்சரிக்கையும் கொடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இதுவரை இல்லாத அளவிற்கு அவலாஞ்சியில் மிக மிக கனமழை பெய்து உள்ளதால் அங்குள்ள மக்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். அவர்களுக்கு தனி ஹெல்மெட் மூலம் உணவு வழங்கவும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்து உள்ளார். கூடுதலாக உயிரிழந்த 5 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூபாய் 10 லட்சம் நிதி உதவி அளிக்க உத்தரவிட்டுள்ளார் எடப்பாடி பழனிசாமி.