Asianet News TamilAsianet News Tamil

அதிமுக படுதோல்வி எதிரொலி.. ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் ஐக்கியமான அதிமுக முக்கிய புள்ளிகள்.

திமுக ஆட்சி பெறுப்பேற்றது முதல் அதிமுக ,அமமுக, தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்தவர்கள் தொடர்ந்து திமுகவில் இணைந்தவண்ணம் உள்ளனர். இந்ந நிலையில் உள்ளாட்சி மன்ற தேர்தலிலும் அதிமுக படுதோல்வி அடைந்துள்ள நிலையில்

Echo of AIADMK defeat .. AIADMK key points united in DMK in the presence of Stalin.
Author
Chennai, First Published Oct 25, 2021, 11:02 AM IST

15-க்கும் மேற்பட்ட அதிமுக முக்கிய நிர்வாகிகள் திமுகவில்  இணைந்ததாக, திமுக சார்பில் செய்தி அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:- முதலமைச்சரும் கழக தலைவருமான மு.க ஸ்டாலின் முன்னிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக தலைமை அலுவலகத்தில் 24-10-2021 காலை சென்னை வடக்கு மாவட்ட அதிமுகவைச் சேர்ந்த திரு. வி. க நகர் தெற்கு பகுதி செயலாளர் கே. சுப்புரூ, வடசென்னை தெற்கு கிழக்கு மாவட்ட பொருளாளர் ஆர்.மகேஷ், வடசென்னை தெற்கு மாவட்ட எம்ஜிஆர் செயலாளர் ராஜாமுகமது. 

Echo of AIADMK defeat .. AIADMK key points united in DMK in the presence of Stalin.

வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட மருத்துவ அணி மாவட்ட செயலாளர் மருத்துவர் புகழேந்தி, வட சென்னை கிழக்கு மாவட்ட எம்ஜிஆர் மன்ற மாவட்ட செயலாளர்  எஸ்.பி.எஸ். ராஜா, இந்திய மருத்துவ சங்க தமிழ்நாடு மாநில தலைவர் மருத்துவர் பி செந்தமிழ் பாரி, பெரம்பூர் பகுதி எம்ஜிஆர் மன்ற செயலாளர் கே.எஸ் அஸ்ஸலாம், வட்டச் செயலாளர் எஸ்.பரிமளம், ஆர்.கே நகர் மேற்கு பகுதி துணைச் செயலாளர் எஸ். வி ரவி, வட சென்னை கிழக்கு எம்ஜிஆர் மன்ற மாவட்ட துணைச் செயலாளர்  ஆர். மூர்த்தி, வட சென்னை தெற்கு கிழக்கு எம்ஜிஆர் மன்ற மாவட்ட இணைச்செயலாளர் ராமமஞ்செரி ஆர்.நடராஜன்.

இதையும் படியுங்கள்: மது பிரியர்களுக்கு பயங்கர அதிர்ச்சி. தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் மூடப்படும்.?? அமைச்சர் அதிரடி அறிவிப்பு
 

வட சென்னை மேற்கு மாவட்ட வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் நா.சேகர் என்கிற பிரஸ் சேகர், வட சென்னை தெற்கு மாவட்டம் 55வது வட்ட அவைத் தலைவர் மனோகரன் மற்றும் அமமுக கட்சியை சேர்ந்த மாநில வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் வழக்கறிஞர் ஜெகன் ஆகியோர், திமுகவில் இணைந்தனர். அப்போது இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு, வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, மாவட்ட செயலாளர்கள் உடன் இருந்தனர். 

Echo of AIADMK defeat .. AIADMK key points united in DMK in the presence of Stalin.

இதையும் படியுங்கள்:  தனியாளாக நின்று மிரளவிட்ட தமிழக எம்.பி.. இந்தி திணிப்புக்கு சமாதி.

திமுக ஆட்சி பெறுப்பேற்றது முதல் அதிமுக ,அமமுக, தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்தவர்கள் தொடர்ந்து திமுகவில் இணைந்தவண்ணம் உள்ளனர். இந்ந நிலையில் உள்ளாட்சி மன்ற தேர்தலிலும் அதிமுக படுதோல்வி அடைந்துள்ள நிலையில் அக்கட்டியை விட்டு விலகி ஏராளமானோர் திமுகவில் ஐக்கியமாகி வருகின்றனர். இது அதிமுக தலைமைக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது என்றே கூறலாம். 

 

Follow Us:
Download App:
  • android
  • ios