Asianet News TamilAsianet News Tamil

30 ஆண்டுகளில் முதன் முறையாக முன்கூட்டியே நடைபெறும் தேர்தல்... தமிழக தேர்தலின் டைம் டிராவல்..!

கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தமிழகத்தில் முன்கூட்டியே சட்டப்பேரவைத் தேர்தல் இந்த ஆண்டு நடைபெறுகிறது. 
 

Early elections for the first time in 30 years ... Time travel of Tamil Nadu elections ..!
Author
Chennai, First Published Feb 27, 2021, 8:41 AM IST

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த 30 ஆண்டுகளில் தமிழகத்தில் முன்கூட்டியே நடத்தப்படும் தேர்தலாக இந்த ஆண்டு நடைபெறும் தேர்தல் அமைந்துள்ளது. 1991-ஆம் ஆண்டு முதலே தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் 1991-ஆம் ஆண்டு மே 25-இல் சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், ராஜிவ் காந்தி ஸ்ரீபெரும்புதூரில் கொல்லப்பட்டதால், தேர்தல் ஜூன் 15-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.Early elections for the first time in 30 years ... Time travel of Tamil Nadu elections ..!
1996-ஆம் ஆண்டில் மே 2-ஆம் தேதி தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. 2001-ஆம் ஆண்டில் மே 10-ஆம் தேதியும், 2006-ஆம் ஆண்டில் மே 8-ஆம் தேதியும் சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடைபெற்றன. ஆனால், 2011-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 13-ஆம் தேதியே நடைபெற்றது. ஆனால், வாக்கு எண்ணிக்கையோ மே 13-ஆம் தேதிதான் நடைபெற்றது. தேர்தலுக்கும் வாக்கு எண்ணிக்கைக்கும் ஒரு மாதம் கால அவகாசம் இருந்ததை அன்றைய தமிழக முதல்வர் மு.கருணாநிதி விமர்சனம் செய்தார்.Early elections for the first time in 30 years ... Time travel of Tamil Nadu elections ..!
கடந்த 2016-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் மே மாதம் 16-ஆம் தேதி நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை மே 19-ஆம் தேதி நடைபெற்றது. ஆனால், 2021 சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதியே அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கையோ மே 2-இல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 2011-ஆம் ஆண்டைப் போலவே தேர்தல் முடிவை அறிந்துகொள்ள சுமார் ஒரு மாதம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் கடந்த 30 ஆண்டுகளில் தமிழகத்தில் மிகவும் முன்கூட்டியே நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலாகவும் இந்த சட்டப்பேரவைத் தேர்தல் அமைந்துள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios