Asianet News TamilAsianet News Tamil

விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ்... முடங்கித் தவித்த மக்களுக்கு குஷியான செய்தி..!

ஆதார், ரேஷன் கார்டுடன் விண்ணப்பித்தால் ஆகஸ்ட் 17ம் தேதி முதல் இ-பாஸ் வழங்கபடும் என தமிழக  முதல்வர் அறிவித்துள்ளார். 

E pass for all applicants ... Good news for people
Author
Tamil Nadu, First Published Aug 14, 2020, 3:04 PM IST

ஆதார், ரேஷன் கார்டுடன் விண்ணப்பித்தால் ஆகஸ்ட் 17ம் தேதி முதல் இ-பாஸ் வழங்கபடும் என தமிழக  முதல்வர் அறிவித்துள்ளார். 

தமிழகத்தில் கொரோனா தொற்றால் நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கபடுகின்றனர். கொரோனா தொற்றை கட்டுபடுத்த தமிழக அரசு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் நேற்று புதிதாக 5,835 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது.E pass for all applicants ... Good news for people

இதனையடுத்து தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கபட்டவர்கள் எண்ணிக்கை 3,20,355 ஆக உள்ளது. மேலும் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து 2,61,459 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5.397 ஆக உள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் முறை கட்டாயமாக்கபட்டது. ஆனால் அதில் பல குளறுபடிகள் நடப்பதாக புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் ஆதார், ரேஷன் கார்டுடன் விண்ணப்பித்தால் ஆகஸ்ட் 17ம் தேதி முதல் இ-பாஸ் வழங்கபடும் என தமிழக  முதல்வர் அறிவித்துள்ளார். 

விண்ணப்பிக்கு அனைவருக்கும் இ-பாஸ் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். அதைபோல மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல அனைவருக்கும் இ-பாஸ் வழங்கபடும் என அறிவித்துள்ளார். புதிய தளர்வுகளுடன் இ-பாஸ் முறை வருகிற 17ம் தேதி முதல் அமலுக்கு வரும் என தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.E pass for all applicants ... Good news for people

ஆதார் அல்லது ரேஷன் அட்டை நகலுடன் விண்ணப்பித்தால் இ-பாஸ் தாமதமின்றி வழங்கப்படும் என்றும் பொதுமக்கள் நலன் கருதி எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவை அனைவரும் பொறுப்புடன் பயன்படுத்தி, தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும், தவிர்க்க இயலாத பயணங்களுக்கு மட்டுமே இ-பாஸ் விண்ணப்பம் செய்து, இ-பாஸ்  பெற்று பயணிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். நோய்த்தொற்றை தவிர்க்கவும் திருமணம், அவசர மருத்துவம் நெருங்கிய உறவினர் மரணம், பணி சம்பந்தமாக பயணித்தல் ஆகிய காரணங்களுக்கு வெளியிடங்களுக்கு சென்று சொந்த ஊர் திரும்புதல் ஆகிய காரணங்களுக்காக மட்டும் அனுமதி வழங்கப்பட்டு வந்தது.  இந்நிலையில் பொதுமக்கள் முக்கிய பணியிடங்களுக்கு தமிழ்நாடு முழுவதும் பயணிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆயினும் தவிர்க்க இயலாத பணிகள், பயணங்களுக்கு மட்டும் இ-பாஸ் விண்ணப்பம் செய்து பயணிக்குமாறு அந்த அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.  

Follow Us:
Download App:
  • android
  • ios