வேலூர் மக்களவை தேர்தல் அதிமுக வேட்பாளரான ஏ.சி.சண்முகத்தின் வேட்பு மனுவை நிறுத்தி வைத்ததைத் தொடர்ந்து திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தின் வேட்புமனுவும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

கடந்த முறை கதிர் ஆனந்த் திமுக வேட்பாளராக வேலூரில் களமிறங்கினார். அப்போது வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் துரைமுருகன் வீட்டில் நடைபெற்ற சோதனையில் கணக்கில் வராத 10 லட்சம் ரூபாயும், அவர்களுக்கு நெருக்கமனவர்களுக்கு சொந்தமான குடோனில் ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான பணம் வார்டு வாரியாக எழுதி வைக்கப்பட்டு பெட்டி பெட்டியாக பிடிபட்டது. இது வாக்காளர்களுக்கு கொடுக்க பதுக்கி வைத்திருந்த பணம் எனக் கூறப்பட்டது. 

இதனால் வேலூர் தொகுதியில் தேர்தல் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் மீண்டும் கதிர் ஆனந்த் திமுக வேட்பாளராக அங்கு களமிறங்கி உள்ளார். இந்நிலையில் வேட்புமனு தாக்கல் செய்தார். அவரது வேட்புமனு இன்று பரிசீலனைக்கு வந்தது. அப்போது, வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டதாக கதிர் ஆனந்த் மீது வழக்கு இருப்பதால் அவரது மனுவை ஏற்கக்கூடாது என சுயேட்சையாக களமிறங்கும் வேட்பாளர் ஒருவர் எதிர்ப்புத் தெரிவித்தார். இதனால் கதிர் ஆனந்தின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்கு கதிர் ஆனந்த் உரிய பதில் அளிக்கும் விதத்தை பொறுத்தே அவரது வேட்புமனு ஏற்கப்படுவது தெரிய வரும்.  

முன்னதாக புதிய நீதி கட்சி தலைவராக இருக்கும் அவர் அதிமுக வேட்பாளர் என்பதற்கான கடிதத்தை கொடுக்கவில்லை. வேட்புமனு பரிசீலனை நாளான இன்று அவரது வேட்பு மனு பரிசீலனை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.