திமுக பொருளாளராக உள்ள துரைமுருகன் அப்பொறுப்பில் இருந்து விலக விருப்பம் தெரிவித்துள்ளார். பொதுச்செயலாளர் பதவிக்கு துரைமுருகன் போட்டியிட உள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மு.க.ஸ்டாலின், மார்ச் 29ம் தேதி நடக்கும் திமுக பொதுக்குழு கூட்டத்தில் திமுக பொதுச்செயலாளர், பொருளாளர்  பதவிக்கு தேர்வு நடைபெற உள்ளது’’ என அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார். 1978-ல் கட்சி அமைப்புத் தேர்தல் மூலம் அன்பழகன் முறைப்படி திமுக பொதுச்செயலாளர் ஆனார். கடைசியாக 2015-ல் அமைப்புத் தேர்தல் மூலம் கட்சி பொதுச்செயலாளராக அன்பழகன் தேர்வு செய்யப்பட்டார். கடந்த 43 ஆண்டுகளாக பொதுச்செயலாளராக இருந்த அன்பழகனின் மறைவு திமுகவில் 4 தசாப்தங்கள் கழித்து புதிய பொதுச்செயலாளரைத் தேர்வு செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டது. 

தற்போது திமுகவின் 15-வது உட்கட்சித் தேர்தல் நடைபெற்றுவருகிறது. ஏற்கனவே வெளியிடப்பட்ட அட்டவணைபடி ஆகஸ்ட் மாதத்துக்குள் தலைவர் பதவி தவிர்த்து எல்லாப் பதவிகளுக்கும் தேர்தல் நடத்தி முடிக்கப்பட உள்ளது. செப்டம்பரில் கட்சித் தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்தி முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, திமுகவின் புதிய பொதுச்செயலாளர் பதவிக்கு யார் தேர்வு செய்யப்படுவார் என்ற கேள்வி எழுந்த போது பொதுச்செயலாளராக துரைமுருகன் தேர்வு செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்பட்டது உண்மையாகி இருக்கிறது.