"ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவுடன் கை கோர்த்து அதிமுகவை உடைக்கிறார் சைதை துரைசாமி" என்று வெளியான தகவலை அவர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
அதிமுக பொது செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டதை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் பல பகுதிகளில் அதிமுக தொண்டர்கள் எதிரப்பு தெரிவித்து வருகின்றனர். அதோடு மட்டுமில்லாமல் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவுக்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டுவதும், சென்னை தி.நகரில் உள்ள தீபாவின் வீட்டுக்கு சென்று பார்ப்பதும் என இருக்கிறார்கள்.
நாளுக்கு நாள் தீபாவை பார்ப்பதற்கு கூட்டம் அதிகமாகி கொண்டே செல்வதால், அதை பார்க்கும் அதிமுக நிர்வாகிகளுக்கு சிறிது கலக்கம் ஏற்பட்டு இருப்பது என்னமோ உண்மைதான்.
இந்த நிலையில் பி.எச்.பாண்டியன் போன்றோர் சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய நிலையில், சசிகலாவுக்கு ஆதரவாக, அவர் பொது செயலாளரக ஆக வேண்டும் என வேண்டுகோள் விடுத்து இருந்த சைதை துரைசாமி, அதிமுகவில் இருந்து கட்டம் கட்டப்பட்டு விட்டதாகவும்அதனால், மனமுடைந்த அவர் தீபாவுக்கு ஆதரவாக சென்றுவிட்டார் எனவும் நேற்று சில செய்திகள் வெளியாயின.
இதனை சைதை துரைசாமி, தானாக போன் செய்து, செய்தியாளர்களிடம் மறுத்துள்ளார்.
தாம் கடந்த 31ம்தேதி படிக்கட்டில்இறங்கும்போது கீழே விழுந்துவிட்டதாகவும், அதனால், தனது கால் மூட்டு ஜவ்வு கிழிந்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். உட நலக்குறைவு காரணமாகவே, தான் வெளியே வரவில்லை என்றும்,வேறு அரசியல் காரணம் கிடையாது எனவும் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்தார்.
இதனால், தீபாவுடன் தான் சேரப்போவதாக இருந்த செய்திக்கு சைதை துரைசாமி முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Sep 19, 2018, 2:57 AM IST