திமுக பொருளாளரும் மூத்த தலைவருமான துரைமுருகனுக்கு திடீரென உடல்நக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவரை சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

நாடு முழுவதும் 7 கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெற்று முடிந்துள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை ஆட்சியைத் தீர்மானிக்கக் கூடிய வகையில் 22 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளதால் நாடு முழுவதும் மிகுந்த பரபரப்பு நிலவி வருகிறது. 

இந்நிலையில், தி.மு.க.வின் பொருளாளரும் மூத்த தலைவருமான துரைமுருகன் உடல்நலக் குறைபாடு காரணமாக சென்னை ஆயிரம்விளக்கு பகுதியிலுள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு காய்ச்சல் மற்றும் சிறுநீரக தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே பிரபல நடிகையும் காங்கிரஸ் கட்சியின் தேசிய மக்கள் தொடர்பாளருமான குஷ்பு திடீர் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.