Asianet News TamilAsianet News Tamil

மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தவே பொது சிவில் சட்டம் குறித்து பாஜக பேசுகிறது - துரை வைகோ

மணிப்பூர் கலவரம் உட்பட நாட்டில் பல்வேறு பிரச்சினைகள் உள்ள நிலையில் பொதுமக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தவே பாஜகவினர் பொதுசிவில் சட்டம் குறித்து பேசுவதாக மதிமுக முதன்மைச் செயலாளர் துரைவைகோ குற்றம் சாட்டி உள்ளார்.

durai vaiko slams bjp in trichy
Author
First Published Jun 28, 2023, 6:00 PM IST

தமிழ்நாடு கவர்னர் பொறுப்பில் இருந்து ஆர்.என்.ரவியை பதவி நீக்கம் செய்யுமாறு இந்திய குடியரசு தலைவரை கேட்டுக்கொள்ளும் வகையில் தமிழகம் முழுவதும் ம.தி.மு.க. சார்பில் பொது மக்களிடையே கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை அருகில் இன்று கையெழுத்து இயக்கம் ம.தி.மு.க. முதன்மைச் செயலாளர் துரை வைகோ தலைமையில் நடைபெற்றது.

முன்னதாக சிந்தாமணியில் உள்ள  அண்ணா சிலைக்கு துரை வைகோ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து அண்ணா சிலையில் இருந்து சிங்காரத்தோப்பு, பூம்புகார் விற்பனை நிலையம் வரை நடந்து சென்று பொதுமக்களிடையே கவர்னரை தமிழகத்தைவிட்டு விளக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தெரிவித்து கையெழுத்தை பெற்றார்.

ஆளுநரை மாற்றக் கோரி போஸ்டர் ஒட்டி தீக்குளிக்க முயன்ற திமுக நிர்வாகியால் பரபரப்பு

தொடர்ந்து துரை வைகோ செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழக கவர்னரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி ம.தி.மு.க. சார்பில் நடைபெற்று வரும் கையெழுத்து இயக்கத்திற்கு தி.மு.க. உள்ளிட்ட எங்களின் கூட்டணி கட்சிகள் அனைவரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். எங்களுக்குள் எந்தவொரு பிரச்சினையும் இல்லை. நாட்டில் நிலவும் விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், மணிப்பூர் கலவரம் இதற்கெல்லாம் பதில் கூறாமல், மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக பா.ஜ.க.வினர் பொது சிவில் சட்டம் குறித்து இப்போது பேசுகிறார்கள்.

Crime News Today: மது போதையில் தம்பியை போட்டு தள்ளிய அண்ணன் கைது; திருவாரூரில் பரபரப்பு

நான் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்தும், எந்த தொகுதியில் போட்டியிட வேண்டும் என்பது குறித்தும் எங்கள் கட்சி தலைமையும், கூட்டணி கட்சி தலைமையும் முடிவு செய்யும் என தெரிவித்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios