’டீ செலவுக்கு காசு எடுக்க கூட தி.மு.க.காரனுங்க தயங்கணும். வளைச்சு வளைச்சு ஸ்மெல் பண்ணுங்க.’ டெல்லியில் இருந்து தமிழகத்தின் அ.தி.மு.க. கூட்டணிக்கு பறந்து வந்திருக்கும் தகவல் இது. இந்த உத்தரவை  தலையில் சுமந்தபடி, தி.மு.க. வேட்பாளர்களை 24x7 லைவ் சேனல் கேமெரா போல் பின் தொடர்ந்து கொண்டே இருக்கின்றனர் ஆளுங்கட்சியினர். இதில் டோட்டலாய் தூக்கம் தொலைத்துக் கிடக்கிறது தி.மு.க. 

தி.மு.க.வின் பொருளாளர் துரைமுருகனின் வீடு மற்றும் அருகிலுள்ள குடோன் உள்ளிட்ட வேலூர் தொகுதியின் முக்கிய இடங்களில் நடத்தப்பட்ட ரெய்டும், அதில் கைப்பற்றப்பட்டதாக சொல்லப்படும் பல கோடி பணமும் டோட்டலாய் தி.மு.க.வின் இமேஜை டேமேஜ் செய்துவிட்டிருக்கிறது. தேர்தல் நேரத்தில் பொதுவாக ஆளுங்கட்சியின் கைகளில்தான் கரன்ஸி கரைபுரள்வதாக புகார் பரவும். ஆனால் இப்போதோ தலைகீழாக எதிர்க்கட்சி தி.மு.க.வின் முக்கிய தலை இப்படியான சிக்கலில் மாட்டியிருக்கிறார். 

இதைத்தொடர்ந்து ‘ரெண்டு முறையா ஆட்சியை பிடிக்காத நிலையிலேயே இவங்க கையில இப்படி மாளான பணமுன்னா, ஆட்சியை கொடுத்தால் உங்களுக்கு கோவணம் கூட மிஞ்சாதுய்யா.’ என்று மக்கள் மத்தியில் தி.மு.க.வின் மானத்தை துயிலுறிந்து கொண்டிருக்கின்றனர் அ.தி.மு.க. கூட்டணியினர்.  இந்த கவலை ஒரு புறமிருக்க, அடுத்து எந்த தலையின் தொகுதியில் ரெய்டு? என்பதுதான் இப்போது அக்கட்சியை ஆட்டிப்படைக்கும் கேள்வி.

 

இதுதான் சமயமென்று தி.மு.க. முக்கியஸ்தர்களின் வயிற்றில் புளியை கரைக்கும் வகையில், ‘அடுத்து விழுப்புரம் பொன்முடி, திருச்சி கே.என்.நேரு, நீலகிரி ராசா, தூத்துக்குடி கனிமொழி, திண்டுக்கல் பெரியசாமி ஆகியோரை குறிவைத்து ஒரே நேரத்தில் மாஸ் ரெய்டு நடத்தப்பட இருக்கிறது. இதற்கான கவுண்ட் டவுன் ஸ்டார்ட் ஆகிவிட்டது. துரைமுருகன் சம்பவத்துக்கு பிறகு இவர்களெல்லாம் தங்களின் பணத்தை எங்கே கொண்டு போய் பதுக்கினார்கள் என்பது எங்களுக்கு தெரியும். துரைமுருகனை ஆய்வு செய்து கொண்டிருக்கும்போதே இவர்களையும் ஃபாலோ செய்து எல்லாவற்றையும் ஸ்கெட்ச் போட்டாச்சு. 

விரைவில் ரெய்டு.” என்று கிளப்பியுள்ளனர் ஒரு பகீர் தகவலை. இதைக்கேட்டு துக்கவீடு போல் துன்பத்தில் ஆழ்ந்து கிடக்கிறது தி.மு.க. அரசியல் ரீதியான அழுத்தங்கள் போதாதென்று, இப்படி கட்சியின் பெயரும் ரெய்டு வடிவில் டேமேஜ் ஆக்கப்படும் நிலையில் கட்சியை கரைசேர்க்க வேண்டிய முழுப்பொறுப்பும் ஸ்டாலினின் தோளில் சாய்ந்திருக்கிறது. 

முக்கிய புள்ளிகள் அனைவரும் ஸ்கெட்ச் போட்டு, கார்னர் செய்யப்படும் நிலையில், ஒன் மேன் ஆர்மியாக செயல்பட்டு தங்கள் கூட்டணிக்கு வெற்றி தேடித் தர வெறித்தனமாய் உழைத்துக் கொண்டிருக்கிறார் ஸ்டாலின்! பாவம். கணவருக்காக  அணையா விளக்கோடு பிரார்த்தனையில் இருக்கிறாராம் துர்காஸ்டாலின்!