திமுக தலைவர் கருணாநிதியின் விருப்பங்களின் மிக முக்கியமானது தனது மறைவிற்கு பிறகு மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா சமாதி அருகே தம்மை அடக்க செய்ய வேண்டும் என்பதாகும். அதன் அடிப்படையில் தான் கருணாநிதி நலம் விசாரிக்க வந்த எடப்பாடி பழனிச்சாமியிடம் உருக்கத்தோடு கனிமொழி வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்த நிலையில் கருணாநிதி உடல் நிலை மதியம் மோசமான நிலையில் மு.க.ஸ்டாலின் கனிமொழி, அழகிரி, மு.க.செல்வம், ஐ. பெரியசாமி, துரைமுருகன் ஆகியோர் சென்று எடப்பாடியிடம் மீண்டும் வேண்டுகோள் விடுத்தனர். 

ஆனால் அவர்களது வேண்டுகோளும் கருணாநிதியின் ஆசையும் நிறைவேறாது போல இருக்கிறது. ஏனென்றால் அண்ணா நினைவிடம் அருகே திமுக தலைவர் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய முதல்வரிடம் இடம் கேட்டோம். ஆனால் இதுவரை அவர் பதிலளிக்கவில்லை என துரைமுருகன் பரபரப்பு பேட்டியளித்துள்ளார்.