தற்போது திமுகவில் இருக்கும் மூத்த தலைவகளில் ஒரவர் துரை முருகன். மற்றொரு தலைவர் அக்கட்சியின் பொதுச் செயலாளர் க.அன்பழகள். ஆனால் அன்பழகன்  உடல்நலக்குறைவு காரணமாக தீவிர  அரசியலில் இருந்து ஒதுங்கியுள்ளார்.

ஆனால் துரை முருகன் தற்போது ஆக்டிவ் அரசியலில் உள்ளார். திமுகவின் பொருளாளராக உள்ளார். ஆனால் அவருக்கும் தற்போது மடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்படுகிறது.

இந்நிலையில்  உடல் சோர்வு காரணமாக  துரை முருகன் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரது உடல்நலம் சீராக இருப்பதாக மருத்தவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன..