2019 மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையில் கூட்டணி அமைக்கப்பட்டது. அதில் திமுக 20 தொகுதிகளில் போட்டியிட்டது. வேலூர் தொகுதியில் துரை முருகனின் மகன் கதிர் ஆனந்த் திமுக சார்பில் வேட்பாளராக களம் இறங்கினார்.

துரை முருகன் நீண்ட நாட்களாக பிளான் பண்ணி தனது மகனை இந்தத் தேர்தலில் களம் இறக்கினார் என்றே சொல்ல வேண்டும். எப்போதுமே அந்தத் தொகுதி இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கே ஒதுக்கப்படும். ஆனால் துரை முருகன் தனது மகனுக்காக இந்திய யூனியன்  முஸ்லீம் லீக் கட்சியிடம் பேசி கரெக்ட் செய்துள்ளார்.

கம்பீரமாக களம் இறங்கிய கதிர் ஆனந்துக்கு பணப்பட்டுவாடா என்றொரு சிக்கல் எழுந்தது. துரை முருகனின் பினாமி என்று சொல்லப்பட்ட ஒருவரது சிமிண்ட் கொடோனில் இருந்து 11 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டது. துரை முருகன் அந்தப் பணத்துக்கும், எங்களுக்கும் சம்பந்தம் இல்லை என கூறினாலும் தேர்தல் ஆணையம் வேலூர் தொகுதி தேர்தலை ரத்து செய்தது.

இது துரை முருகனுக்கு பெருத்த அடியாக பார்க்கப்பட்டது. தற்போது தேர்தல் முடிந்தது திமுக போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் பிரமாண்ட வெற்றி பெற்றுள்ள நிலையில், வேலூர் தொகுதியில் தேர்தல் நடைபெற்றிருந்தால் கண்டிப்பாக அவரது மகனும் நிச்சயமாக ஜெயித்திருப்பார். 

ஆனால் இன்னும் தேர்தல் நடத்தாமல் இருப்பது அவருக்கு பெரும் மனக்கவலையைத் தந்துள்ளது. தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்ட அந்த நாளில் துரை முருகன் அப்பல்லோ மருத்துவமனையில் அட்மிட் ஆகியிருந்தார்.

தற்போது டிஸ்சார்ஜ் ஆகியிருந்தாலும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். சிறுநீரகத் தொற்றால் அவர் அவதிப்பட்டு வந்தாலும் அவரது மகன் போடியிட்ட தொகுதியில் தேர்தல் நடக்கவில்லையே எனற பெரும் கவலைதான் அவரை வாட்டி வதைத்து வருகிறது என திமுக தொண்டர்கள் வருத்தத்துடன் கூறுகின்றனர்.