வேலூர் மக்களவை தொகுதிக்கான தேர்தல் வரும் 5ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க சார்பில் சார்பில் திமுக பொருளாளர் துரை முருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிடுபிகிறார். அவரை ஆதரித்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இரண்டாவது நாளாக பிரசாரம் மேற்கொண்டார். கதிர் ஆனந்த் நிம்மியம்பட்டு பகுதியில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் திறந்த வேனில் பிரச்சாரம் செய்தார்.

அப்போது பேசிய அவர்,  வேலூர் தொகுதியில் தி.மு.க வெற்றி பெற்றால் 100 நாள் வேலை திட்டத்தை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். தகுதி உள்ள அனைவருக்கும் முதியோர் உதவித்தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

எட்டு ஆண்டுகளாக  ஆட்சியில் இருக்கிறது அ.தி.மு.க, அப்போது செய்த சாதனைகள் சொல்லி வாக்கு கேட்காமல் தேவையற்றதை பேசி வருகிறார் எடப்பாடி. மோடியின் தயவில், இந்த ஆட்சி நடைப்பெற்று கொண்டிருக்கிறது. இந்த ஆட்சியை காப்பாற்ற போராடும் அ.தி.மு.க அரசுக்கு மக்களை பிரச்சனைகள் பற்றி கவலையில்லை என குற்றம்சாட்டினார்.

தொடர்ந்து பேசி முடிக்கும் போது துரை முருகனின் அன்பு சகோதரர் கதிர் ஆனந்தத்துக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள் என வழக்கம்போல் உளறிக் கொட்டினார். இதனால் அங்கு கூடியிருந்த தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து தவறை திருத்திக் கொண்டு ஸ்டாலின் மாற்றிப் பேசினார்.