DTV Dinakaran said that the investigation is complete with the twin leaf ray and the investigation is over.
இரட்டை இலைக்கும் ரெய்டுக்கும் சம்பந்தம் இல்லை எனவும் விசாரணை அனைத்தும் முடிந்து விட்டது எனவும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
சசிகலாவின் உறவினர்களான டிடிவி உட்பட 187 பேர் வீட்டில் வருமான வரித்துறை கடந்த 3 நாட்களாக சோதனை நடத்தினர்.
இதில் ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும் ரூ. 1000 கோடி சொத்துக்களும் முடக்கப்பட்டுள்ளன.
டிடிவி தினகரன் வீட்டில் ரெய்டு முடிந்ததும் இன்று கிளம்பி திருவண்ணாமலை சென்றார். பின்னர் அங்கு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, இரட்டை இலை வழக்கில் இருந்து உங்களை பின்வாங்க வைக்கவே இந்த ரெய்டு நடத்தப்பட்டதா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த டிடிவி, இரட்டை இலைக்கும் ரெய்டுக்கும் சம்பந்தம் இல்லை எனவும் விசாரணை அனைத்தும் முடிந்து விட்டது எனவும் தெரிவித்தார்.
தொண்டர்களையும் நிர்வாகிகளையும் முடக்கிவிட வேண்டும் என எடப்பாடி, ஒபிஎஸ் அணியினர் நினைக்கின்றனர் எனவும் குறிப்பிட்டார்.
வருமான வரித்துறையின் இந்த மெகா ரெய்டு தேவையா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என தெரிவித்தார்.
