DTV Dinakaran is to leave the squad to the squad and we will lie in the case

டிடிவி தினகரன் அணியில் இருந்து எடப்பாடி அணிக்கு மாற வேண்டும் என்றும் இல்லையேல் பொய் வழக்கு போடுவோம் என்றும் தமிழக போலீசார் தங்களை மிரட்டுவதாக டிடிவி ஆதரவு எம்.எல்.ஏக்களான செந்தில் பாலாஜியும், தங்கதமிழ்செல்வனும் கர்நாடக கூர்க் காவல்நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளனர். 

ஒபிஎஸ் அணியும் இபிஎஸ் அணியும் ஒன்றாக இணைந்தபோது விரைவில் பொதுக்குழு கூட்டி சசிகலா கட்சியில் இருந்து நீக்கப்படுவார் என எடப்பாடி தரப்பில் அறிவிப்பு வெளியானது. 

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து டிடிவிக்கு ஆதரவாக 19 எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். மேலும் எடப்பாடியை நீக்க கோரி ஆளுநரிடம் மனு அளித்தனர். 

இதையடுத்து டிடிவி தினகரன் தரப்பு எம்.எல்.ஏக்கள் புதுச்சேரியில் உள்ள விடுதியில் ஒரு வாரத்திற்கும் மேலாக தங்கியிருந்தனர். 

ஆனால் இதுவரை எவ்வித முடிவும் ஆளுநர் வெளியிடவில்லை. இதனால் டிடிவி எம்.எல்.ஏக்கள் கர்நாடக மாநிலத்தில் உள்ள கூர்கில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் தங்கியுள்ளனர். 

இதைதொடர்ந்து எடப்பாடி தரப்பு கூறியபடி பொதுக்குழுவுக்கு தேதி அறிவித்தது. அதனால் ஆத்திரமடைந்த டிடிவி குரூப் நீதிமன்றத்தை நாடியது. நீதிமன்றத்தில் பொதுக்குழுவுக்கு தடை விதிக்க முடியாது எனவும் அதில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் இறுதி தீர்ப்புக்கு உட்பட்டது எனவும் தெரிவித்தது. 

அதன்படி நேற்று நடைபெற்ற பொதுக்குழுவில் சசிகலாவுக்கு எதிராகவும் டிடிவிக்கு எதிராகவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

இதைதொடர்ந்து குடகு பகுதியில் தனியார் விடுதியில் தங்கியுள்ள 18 பேரிடமும் தமிழக போலீசார் சுய விருப்பத்தின் பேரில் தங்கியுள்ளார்களா என கோவை போலீசார் விசாரணை நடத்தினர். 

இந்நிலையில், டிடிவி தினகரன் அணியில் இருந்து எடப்பாடி அணிக்கு மாற வேண்டும் என்றும் இல்லையேல் பொய் வழக்கு போடுவோம் என்றும் தமிழக போலீசார் தங்களை மிரட்டுவதாக டிடிவி ஆதரவு எம்.எல்.ஏக்களான செந்தில் பாலாஜியும், தங்கதமிழ்செல்வனும் கர்நாடக கூர்க் காவல்நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.