சென்னையில் பெருமளவு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்று வதந்தி கிளப்பியுள்ளனர். இதில் உண்மையில்லை என உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார். 

வடகிழக்கு மழை பொழித்து போனதால் சென்னையில் கடுமையான தண்ணீர் பிரச்சனை தலைவிரித்தாடுகிறது. சாலையெங்கும் மக்கள் காலி குடங்களுடன் அலைகின்றனர். இதனால் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் சாலை மறியல் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மேலும் தண்ணீர் இல்லாததால் ஓட்டல்கள் இழுத்து மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. மேலும் ஐடி நிறுவனங்களில் வீட்டில் இருந்தே வேலை செய்ய ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, பொதுமக்கள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னையில் பெருமளவு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது வதந்தி கிளப்பி வருகின்றனர். 

சென்னையில் எந்த ஐ.டி. நிறுவனங்களும் ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்ய சொல்லவில்லை, ஓட்டல்கள் எதுவும் தண்ணீர் இல்லாமல் மூடப்படவில்லை. தமிழகத்தில் தற்போது இருப்பில் உள்ள குடிநீர் நவம்பர் மாதம் வரையில் கட்டுப்பாடு இல்லாமல் வழங்கப்படும். குடிநீர் விநியோகத்தை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. சென்னையில் ஓட்டல்களும் தண்ணீர் இல்லாமல் மூடப்படவில்லை. இது போன்ற தவறான செய்திகள் பரப்பினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் வேலுமணி எச்சரித்துள்ளார்.