தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர ராஜனை போதை வாலிபர் ஒருவர் தாக்க முயற்சி செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
சென்னை புறநகர் பொதுக்கூட்டத்தில் இன்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை கலந்துக்கொண்டனர். 

அப்போது யாரும் எதிர்பாராத  நேரத்தில் பொதுமேடைக்கே வந்து பாஜக 
தலைவர் தமிழிசை சௌந்தர ராஜனை போதை வாலிபர் ஒருவர் தாக்க முயன்றார் இதனால் அங்கு  பரபரப்பு ஏற்பட்டது. 

இதனால் உடனடியாக தமிழிசையை தாக்க முயற்சித்த இளைஞரை போலீசார் கைது செய்தனர், அவர் எந்த நோக்கத்தில் அடிக்க முயன்றார், இவரை யாரவது அடிக்க சொல்லி தூண்டி விட்டார்களா..?என போலீசார்  விசாரணை செய்து வருகிறார்கள். 

தமிழக பாஜக தலைவரையே ஒருவர் அடிக்க முயற்சி செய்துள்ள சம்பவம் அரசியல் வட்டாரத்தில்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.