Asianet News TamilAsianet News Tamil

தமிழ்நாட்டை காவிகள் 'காலி' செய்ய பார்க்கிறார்கள்... முதல்வர் நடவடிக்கையை பாருங்கள்... எச்சரித்த கி.வீரமணி

சமூகநீதியில் நமது முதலமைச்சர் தொடர்ந்து செய்துவரும் சாதனைகள் இந்தியா முழுவதும் பாராட்டப்படுவதுமான ஒரு காலகட்டத்தில், தந்தை பெரியார் சிலை அவமதிக்கப்படுவதை இணைத்துப் பார்க்கவேண்டும்.

Dravida party president ki veeramani about kovai vellalur periyar statue issue
Author
Coimbatore, First Published Jan 10, 2022, 7:10 AM IST

கோவை வெள்ளலூரில் உள்ள பெரியார் சிலைக்கு நேற்று மர்மநபர்கள் காவி பொடி தூவி, செருப்பு மாலை அணிவித்துள்ளனர். இதைக் கண்ட பெரியார் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் அப்பகுதியில் கூடியுள்ளனர். இதனால், இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து திராவிட கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தந்தை பெரியார் சிலைக்கு செருப்பு மாலை கோயம்புத்தூர் - வெள்ளலூரில் தந்தை பெரியார் சிலைக்கு கயவர்கள் செருப்பு மாலை போட்டுள்ளனர். தந்தை பெரியார் சிலை அவமதிக்கப்படும் கயமைத்தனம் திட்டமிட்ட வகையில் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டு இருந்தது.

Dravida party president ki veeramani about kovai vellalur periyar statue issue

குற்றவாளிகள்மீதான நடவடிக்கைகள் - தண்டனைகள் என்பது மிகவும் மெத்தனமாகவே நடப்பது என்பது - கயவர்களுக்கு மேலும் உற்சாகத்தை அளித்து வருகிறது கண்டுபிடிக்கப்பட்டதாக சொல்லப்படும் குற்றவாளிகள் மனநோயாளிகள் என்று சொல்லி, இத்தகைய வழக்கின் கோப்புகள் முடித்து வைக்கப்படும் போக்கு - காவல்துறையின் நடைமுறையாகவும் ஆகிவிட்டது.

தந்தை பெரியார் பிறந்த நாள் சமூகநீதி நாள் என்றும், இந்த அரசு பெரியார் கொள்கை வழி செயல்படும் அரசு என்றும், சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மானமிகு மாண்புமிகு மு. க. ஸ்டாலின் அவர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருப்பதும், சமூகநீதியில் நமது முதலமைச்சர் தொடர்ந்து செய்துவரும் சாதனைகள் இந்தியா முழுவதும் பாராட்டப்படுவதுமான ஒரு காலகட்டத்தில், தந்தை பெரியார் சிலை அவமதிக்கப்படுவதை இணைத்துப் பார்க்கவேண்டும்.

Dravida party president ki veeramani about kovai vellalur periyar statue issue

மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் - முக்கியமாக இதில் கவனம் செலுத்தி, காவல்துறையை முடுக்கிவிட்டு (காவல்துறை முதலமைச்சரின் துறை) குற்றவாளிகள் - அதன் பின்னணியில் இருப்பவர்கள்மீதான நடவடிக்கை - தண்டனையை சரியான வகையில் எடுத்து விரைவுப்படுத்தவேண்டும் என்று வலியுறுத்துகிறோம். குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டனர் என்ற நிலை உருவாகும்போதுதான் - இதற்கொரு முடிவு எட்டப்பட முடியும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம் தமிழ்நாட்டை அமளிக்காடாக ஆக்கவேண்டும் என்று காவிகள் - காலிகள் முயற்சிக்கிறார்கள் என்பதையும் அரசு கவனத்தில் கொண்டு இந்தப் பிரச்சினையை அணுகவேண்டும் என திராவிட கழக தலைவர் கி.வீரமணி  தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios