டாக்டர் அன்புமணியின் ஜாதிவெறியை வெளுத்துக் கட்டி பெரும் சர்ச்சைக்குள்ளான மனவள டாக்டர் ஷாலினி நேற்று நிருபரின் ஜாதியைக் கேட்டு அசிங்கப்பட்ட டாக்டர் கிருஷ்ணசாமியையும் தனது முகநூல் பக்கத்தில் கிழித்துத் தொங்கவிட்டுள்ளார்.

2019 நாடாளுமன்றத் தேர்தலில், அதிமுகவுடன் கூட்டணி வைத்த புதிய தமிழகம் கட்சிக்கு ஒரு மக்களவை தொகுதி ஒதுக்கப்பட்டது. ஒப்பந்தத்தின் படி, தென்காசி தனித் தொகுதி ஒதுக்கப்பட, டாக்டர் கிருஷ்ணசாமியே அதில் நேரடியாக களம் கண்டார். அவரை எதிர்த்து திமுக தரப்பில் தனுஷ் எம்.குமாரும், அமமுக தரப்பில் பொன்னுத்தாயியும் களமிறங்கினர். தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் முடிவில் 1,20,286 வாக்குகள் வித்தியாசத்தில் கிருஷ்ணசாமியை, திமுக வேட்பாளர் தனுஷ் எம்.குமார் வீழ்த்தினார்.

இந்நிலையில் நேற்று சென்னை பொதிகை இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த டாக்டர் கிருஷ்ணசாமி, பத்திரிகையாளர் ஒருவரிடம், “நீ என்ன சாதி..?” என்று கேட்டார். இதனால் கொதிப்படைந்த நிருபர்கள், “நீங்கள் அப்படி பேசியது தவறு. எக்காரணம் கொண்டும் பத்திரிகையாளர்களிடம் சாதி பெயர் கேட்பது தவறு” என்று எதிர்ப்பு தெரிவித்தனர். இதன் காரணமாக அங்கு சில நிமிடங்கள் சலசலப்பு ஏற்பட்டது. பின்னர் தான் அவ்வாறு கேட்டதற்கு கிருஷ்ணசாமி மன்னிப்பு கூறியதால், நிருபர்கள் அமைதியடைந்தனர்.

இந்நிகழ்ச்சி குறித்து தனது முகநூல் பக்கத்தில் கருத்துத் தெரிவித்துள்ள டாக்டர் ஷாலினி,..Foreign reporter, 
English paper reporter
Hindi channel reporter
இவங்க கிட்ட என்ன கேட்டிருப்பார் மரு. கிருஷ்ணசாமி?
போங்கடா போங்கடா நீங்களும் உங்க மைக்ரோ மனசும்!! என்று மிகக் கடுமையாகப் பதிவிட்டுள்ளார்.