வழக்கமாக நாள்தோறும் நடக்கும் சமூகப் பிரச்சினையை வைத்து அதிரடியா அறிக்கை விடுவது ராமதாஸின் ஸ்டைல், தேர்தலுக்கு பின் திமுகவை வெக்ஹ்சு கிழித்தெடுத்த அவரை, தனது மகனுக்கு ராஜ்யசபா சீட் கொடுக்காத கோபத்தில்,   கடந்த ஒரு வாரமாக அதிமுகவை  கொஞ்சம் கொஞ்சமாக கிழித்து தொங்கவிட்டு வருகிறார். இந்த கேப்பில் திமுகவிற்கு நட்பு பாராட்டும் விதமாக பழைய மேட்டர் ஒன்றை அவிழ்த்து விட்டார். 

அதில், அப்போதைய அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான ஜெயலலிதா பேசும் போதெல்லாம் மைனாரிட்டி அரசு என்றே விளிப்பார். இது முதல்வராக இருந்த  கலைஞருக்கு பெரும் தலைவலியாக இருந்தது. ஆனாலும், அவரது அரசு ஐந்தாண்டுகள் தாக்குபிடித்தது. அதற்கு காரணம் பாட்டாளி மக்கள் கட்சியின் நிபந்தனையற்ற ஆதரவு தான் என நியாபகப்படுத்தும் விதமாக கூறியிருந்தார். இந்நிலையில், இன்று எந்த முக்கிய மேட்டரும் சிக்காததால் தனது பழைய கால அதாவது வன்னியர் சங்கத்திம் உருவான சமயத்தில் நடந்த ஒரு சம்பவத்தைப் பற்றி பகிர்ந்துள்ளார் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.


அதில்;‘சங்க’ கால நினைவுகள்: வயிற்றையும், மனதையும் நிறைத்த 
ஏழைத் தொண்டன் இல்ல எளிய உணவு!

ஒருமுறை சங்க வேலையாக ஈரோட்டுக்கு சென்றிருந்தேன். நானும் நிர்வாகிகளும் உணவருந்த வேண்டும். எந்த உணவகத்தில் சாப்பிடலாம் என யோசித்துக் கொண்டிருந்தோம். அப்போது தான் இந்த பகுதியில் நமது சங்கத்திற்காக கடுமையாக உழைக்கும் ஏழைத் தொண்டன் யார்? அவரது வீடு எங்கு உள்ளது? என்று வன்னியர் சங்க நிர்வாகிகளிடம் கேட்டேன்.

அவர்கள் ஒருவரின் பெயரைக் கூறினார்கள். அவர் வீட்டிற்கு சென்று அவர் கொடுக்கும் உணவை சாப்பிடலாம் என்று கூறினேன். அதன்படியே அந்த ஏழைத் தொண்டரின் குடிசை வீட்டிற்கு சென்றோம். நாங்கள் சென்ற நேரத்தில் அவர் வீட்டில் இருந்தது பழைய சோறு தான். அதை அவரும், அவரது குடும்பத்தினரும் அன்பு கலந்து பரிமாறினார்கள். 

அந்த பழைய சோறு அவ்வளவு சுவையாக இருந்தது. அவர் படைத்த உணவால் வயிறு நிறைந்தது. அவர் காட்டிய அன்பால் மனம் நிறைந்தது. பின்னர் மகிழ்ச்சியுடன் அங்கிருந்து புறப்பட்டு சங்கப் பணிகளை மேற்கொள்ளச் சென்றோம். இது போன்று ஏழைத் தொண்டர்களின் வீடுகளில் உணவருந்திய அனுபவம் எனக்கு ஏராளமாக உண்டு என தனது இனிய நினைவை பகிர்ந்துள்ளார்.

டாக்டர் ராமதாஸின் இந்த முகநூல் பதிவை பார்த்த பாட்டாளி மக்கள் கட்சியினரும், வன்னியர் சங்கத்தை சேர்ந்த தொண்டர்களும், எங்க அய்யா எப்பவுமே தொண்டர்களை மதிப்பவர், சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்த ஒரு எளிமையானவர் என நெகிழ்ச்சியாக பதிவிட்டு வருகின்றனர்.