திரெளபதி சினிமா பார்த்த டாக்டர்.ராமதாஸ்.!! திருமாவுக்கு பதிலடி...!!
சமீபத்தில் சர்ச்சையை கிளப்பிய தமிழ் சினிமா 'திரௌபதி' திரையரங்குகளில் ரிலீஸ் ஆகியுள்ளது. ‘பழைய வண்ணாரப்பேட்டை' பட இயக்குநர் மோகன்.ஜி இயக்கிய திரைப்படம் தான் 'திரௌபதி'.'அஞ்சலி' திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து, பிறகு ‘காதல் வைரஸ்' திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி தமிழ் மற்றும் தெலுங்கில் பல படங்களில் நடித்த ரிஷி ரிச்சார்டு .இப்படத்தில் கதாநாயகன்.
T.Balamurukan
'சாதிகள் உள்ளதடி பாப்பா;குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம் ' பாரதியார் சொன்னது பொய் இன்னும் சாதிகள் தலைவித்தாடி கொண்டிருக்கிறது தன் உண்மை என்பதை விளக்கி காட்டுகிறது இந்த சினிமா.சமீபத்தில் சர்ச்சையை கிளப்பிய தமிழ் சினிமா 'திரௌபதி' திரையரங்குகளில் ரிலீஸ் ஆகியுள்ளது. ‘பழைய வண்ணாரப்பேட்டை' பட இயக்குநர் மோகன்.ஜி இயக்கிய திரைப்படம் தான் 'திரௌபதி'.'அஞ்சலி' திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து, பிறகு ‘காதல் வைரஸ்' திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி தமிழ் மற்றும் தெலுங்கில் பல படங்களில் நடித்த ரிஷி ரிச்சார்டு .இப்படத்தில் கதாநாயகன்.
இப்படத்திலிருந்து வேல் முருகன் பாடிய 'கண்ணாமூச்சி ஆட்டம்' பாடல் சில மாதங்களுக்கு முன் வெளியாகி பட்டையை கிளப்பியது. இந்த திரைப்படத்தின் சிறப்புக் காட்சியைப் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனம் ராமதாஸ், கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் தியேட்டருக்கு சென்று பார்த்துள்ளார். அதன் பின்னர் அவர் தனது கருத்தைத் ட்விட்டர் பதிவில் சொல்லியிருக்கிறார்.
ராமதாஸ், “பாட்டாளிகளுடன் திரௌபதி திரைப்படம் பார்த்தேன். இன்றைய சமூகத்திற்குத் தேவையான பல செய்திகளைச் சொல்லும் படம். பெண்களின் பாதுகாப்பை வலியுறுத்தும் படம். பெண் குழந்தைகளைப் பெற்றவர்கள் அனைவரும் குடும்பத்துடன் தவறாமல் பார்க்க வேண்டிய படம்! 'திரௌபதி' என்று ட்விட்டர் மூலம் கருத்தை பதிவு செய்துள்ளார்.பெண் குழந்தைகள் காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் டாக்டர்.ராமதாஸ் திரெளபதி படம் பார்த்து கதை சொல்லியிக்கிறார்.