விவசாயிகளின் பாதுகாவலனாக மாற எளிய வழிகள் என்னென்ன என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை கலாய்த்துள்ளார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.
திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை அவ்வப்போது பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலாய்த்துவருகிறார். ட்விட்டரில் அவ்வப்போது ஏதாவது நிலைத்தகவல் இட்டு அதில் மு.க. ஸ்டாலினை விமர்சித்தும் வருகிறார். டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றும் மசோதாவை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கொண்டு வந்த விவகாரத்தில், அவரை திமுக  தலைவர் மு.க. ஸ்டாலின் விமர்சித்துவருகிறார். 
இந்நிலையில் மு.க. ஸ்டாலினை ட்விட்டரில் கலாய்த்துள்ளார். இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “விவசாயிகளின் பாதுகாவலனாக மாற எளிய வழிகள்: 1. கரும்புத் தோட்டத்துக்கு கான்கிரீட் பாதை அமைத்து செல்ல வேண்டும், 2. மீத்தேன் திட்டத்திற்கு கையெழுத்திட வேண்டும், 3. பெட்ரோலிய மண்டலத்தை அனுமதிக்க வேண்டும்.

 
4.பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்பதன்  பெயரும், பொருளும்கூட தெரியாமல் சிறப்பு பொருளாதார மண்டலம் என்று உளற வேண்டும், 5. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மசோதா வாக்கெடுப்பின் போது வழக்கம் போல வெளிநடப்பு செய்ய வேண்டும்!” என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.