Asianet News TamilAsianet News Tamil

நிதியை விட நீதிதான் முக்கியம்... 7 வயது சிறுமியின் பாலியல் சித்ரவதை படுகொலையால் கிருஷ்ணசாமி ஆவேசம்!

"டெல்லியில் நிர்பயா கொலைக் குற்றவாளிகள் மைனர்களாக இருந்தபோதிலும் எவ்வித கருணையும் காட்டாமல் தூக்கிலிடப்பட்டதை நினைவு கூற விரும்புகிறேன். எனவே, வழக்கு எந்த விதத்திலும் நீர்த்து போகாமல் விரைவு நீதிமன்றத்தின் மூலமாக நடத்தி, ஜெயப்பிரியாவின் பலாத்காரம் மற்றும் படுகொலையில் நீதியை பெற்றுத் தர மாநில அரசை கேட்டுக் கொள்கிறேன்.” என்று அறிக்கையில் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

Dr.Krishnasamy on 7 year old girl rape and murder
Author
Chennai, First Published Jul 2, 2020, 9:36 PM IST

புதுக்கோட்டையில் 7 வயது சிறுமி பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தில் பெற்றோருக்கு நிதியுதவி வழங்க வேண்டும் என்பது ஒருபக்கம் இருந்தாலும், குற்றவாளிகள் அனைவரையும் நீதிமன்றத்தில் நிறுத்தி நீதியை பெற்றுத் தருவதையே தலையாயக் கடமையாக மாநில அரசு கருத வேண்டும் என்று புதிய  தமிழகம் நிறுவனத் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். Dr.Krishnasamy on 7 year old girl rape and murder
இதுதொடர்பாக கிருஷ்ணசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதுக்கோட்டை மாவட்டம், ஏம்பல் கிராமத்தைச் சார்ந்த 7 வயது சிறுமி பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த மனிதநேயமற்ற செயலை செய்தவர்களுக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். ஜெயப்பிரியாவை இழந்து வாடும் பெற்றோர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். ஆவுடையார்கோவில் ஒன்றியம், ஏம்பல் கிராமத்தை சேர்ந்த நாகூரான் – செல்வி தம்பதியர்களின் குழந்தை ஜெயப்பிரியா கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு காணாமல் போன நிலையில், அக்குழந்தையின் உடல் மனித மிருகங்களால் சீரழிக்கப்பட்டு ஒரு காட்டுப் பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

Dr.Krishnasamy on 7 year old girl rape and murder
அக்குழந்தையின் மரணத்தை கேட்பதற்கே மிகவும் துயரமாக இருக்கிறது. அக்குழந்தையின் பாலியல் பலாத்காரம் மற்றும் படுகொலையில் சமந்தப்பட்ட அனைத்து குற்றவாளிகளையும் சிறிதும் காலம் தாழ்த்தாமல் கைது செய்யவும், அந்த வழக்கை சிறப்பு நீதிமன்றத்தில் நடத்தி இந்த வன்கொடுமைக்கு ஈடான தண்டனையை பெற்றுத்தரவும் புதுக்கோட்டை காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன். அக்குழந்தையை இழந்த பெற்றோருக்கு நிதியுதவி வழங்க வேண்டும் என்பது ஒருபக்கம் இருந்தாலும், குற்றவாளிகள் அனைவரையும் நீதிமன்றத்தில் நிறுத்தி நீதியை பெற்றுத் தருவதையே தலையாயக் கடமையாக மாநில அரசு கருத வேண்டும்.Dr.Krishnasamy on 7 year old girl rape and murder
டெல்லியில் நிர்பயா கொலைக் குற்றவாளிகள் மைனர்களாக இருந்தபோதிலும் எவ்வித கருணையும் காட்டாமல் தூக்கிலிடப்பட்டதை நினைவு கூற விரும்புகிறேன். எனவே, வழக்கு எந்த விதத்திலும் நீர்த்து போகாமல் விரைவு நீதிமன்றத்தின் மூலமாக நடத்தி, ஜெயப்பிரியாவின் பலாத்காரம் மற்றும் படுகொலையில் நீதியை பெற்றுத் தர மாநில அரசை கேட்டுக் கொள்கிறேன்.” என்று அறிக்கையில் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios