double leaves symbol for ops team
ஆர்கே நகர் தொகுதியில் அடுத்த மாதம் 2ம் தேதி நடைபெற உள்ளது. இதில், அனைத்து கட்சியினரும் போட்டியிடுகின்றனர்.
குறிப்பாக அதிமுகவில் சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், தீபா என 3 அணிகள் செயல்படுகின்றன. இதில், தீபாவுக்கு சேவல் சின்னம் கேட்டு விண்ணப்பித்துள்ளார்.
ஆனால், கட்சியின் நிரந்தர சின்னமான இரட்டை இலையை தனக்கே வேண்டும் என சசிகலா தரப்பினரும், ஓ.பன்னீர்செல்வம் தரப்பினரும் தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டு வருகின்றனர். ஆனால், தேர்தல் ஆணையத்திடம் இருந்து இதுவரை எவ்வித பதிலும் இல்லை.

இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த மனோஜ்பாண்டியன், தேர்தல் ஆணையத்தில் இன்று ஒரு மனு கொடுத்துள்ளார்.
அதில், ஆர்.கே.நகர் தொகுதியில் நடக்கும் இடை தேர்தலில் அதிமுகவின் ஓ.பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த மதுசூதுனன் போட்டியிடுகிறார். வேட்பாளரான அவருக்கு, கட்சியின் நிரந்தர சின்னமான இரட்டை இலையை வழங்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

ஆனால், அதிமுக பொது செயலாளர் பதவிக்கு சசிகலா தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்ற தீர்வு வருவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இந்த வேளையில் ஓ.பி.எஸ். அணியினர் தங்களுக்கு இரட்டை இலை சின்னத்தை வழங்கவேண்டும் என கோரிக்கை விடுத்து வருவதால், அந்த சின்னம் முடக்கப்படலாம் என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
