Dont talk anything about watsapp news in assembly said by jayakumar

ஜிஎஸ்டி என்பது தனி கவுன்சில் எனவும் அதுகுறித்து வாட்ஸ் அப்பில் கேளி, கிண்டல் செய்வது பற்றி பேச வேண்டிய அவசியம் இல்லை எனவும் நிதித்துறை அமைச்சர் ஜெயக்குமார் ஸ்டாலினுக்கு பதில் அளித்துள்ளார்.

சட்டப்பேரவையில் மாநிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதுவரை நடைபெற்ற அனைத்து மாநிய கோரிக்கை விவாதத்தில் இருந்தும் தொடர்ந்து வெளிநடப்பு செய்து திமுக சாதனை படைத்துள்ளது.

இந்நிலையில் இன்று கேள்வி நேரத்தின்போது திமுக செயல்தலைவர் ஸ்டாலின் ஜிஎஸ்டி குறித்து வாட்ஸ் அப்பில் பல்வேறு கேளி, கிண்டல்கள் வந்த வண்ணம் உள்ளதாகவும், ஜிஎஸ்டியை மக்கள் ஏற்று கொள்ளவில்லை எனவும் தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்து பேசிய நிதித்துறை அமைச்சர் ஜெயக்குமார், ஜிஎஸ்டி என்பது தனி கவுன்சில் எனவும், அது ஆய்வு செய்து பல்வேறு விவாதங்களுக்கு பின் அமல்படுத்தப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

மேலும் மாநில அரசு 169 பொருட்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும், ஜிஎஸ்டி குறித்து வாட்ஸ் அப்பில் கேளி, கிண்டல் செய்வது பற்றி பேச வேண்டிய அவசியம் இல்லை எனவும் தெரிவித்தார்.