கோடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தொடர்பு படுத்தி பேச மேத்யூ சாமுவேல் உட்பட 7 பேருக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.
கோடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை மற்றும் கொள்ளையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்பிருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆவணப்பட வீடியோவை டெஹல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் வெளியிட்டார். இதற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மறுப்புத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் சென்னை வந்த மேத்யூ சாமுவேல் , எனக்கு எந்த அரசியல் பின்னணியும் இல்லை என்றும், கோடநாடு விவகாரத்தை சட்டரீதியாக சந்திப்பேன் என்றும் தெரிவித்தார்.
இதையடுத்து தனது பெயருக்கு களங்கம் உண்டாக்கும் வகையில் பேசிய மேத்யூ சாமுவேல் தனக்கு 1 கோடியே 10 லட்சம் ரூபாய் மானநஷ்ட ஈடு தரவேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்நிலையில் இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கோடநாடு விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்து ஆதாரமின்றி பேசவும், ஆவணங்களை வெளியிடவும் மேத்யூ சாமுவேல் உட்பட 7 பேருக்கு நீதிபதிகள் தடை விதித்தனர்..
மேலும் முதலமைச்சரின் மனுவுக்கு 30-ம் தேதிக்குள் பதிலளிக்க மேத்யூ உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்..
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Jan 23, 2019, 8:45 PM IST