இந்தி மொழியை மறைமுகமாகவும் நேரடியாகவும் மத்திய அரசு திணிப்பதை கைவிட வேண்டும் என திமுக செயல்தலைவர் முக ஸ்டாலின் வாட்ஸ்அப் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடந்த 2011 ஆம் ஆண்டு ப.சிதம்பரம் தலைமையில் அமைக்கப்பட்ட நாடாளுமன்ற குழு இந்தி மொழி பயன்பாடு தொடர்பான பரிந்துரைகளை மத்திய அரசிடம் சமர்பித்தது.

அதில் குடியரசு தலைவர் மற்றும் மத்திய அமைச்சர்கள் இந்தியில் மட்டுமே பேசவோ மசோதாக்களை தாக்கல் செய்யவோ வேண்டும் என தெரிவிக்கபட்டிருந்தது.

இதற்கு குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி தற்போது ஒப்புதல் அளித்துள்ளார்.

இந்நிலையில் இதுகுறித்து திமுக செயல்தலைவர் முக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் வாழும் அனைத்து மக்களும் சம உரிமை வழங்க வேண்டும் என்கிறது சட்டம்.

ஆனால் மத்திய அரசின் திட்டங்களுக்கு இந்தி, சமஸ்கிருதம் மொழிகளிலேயே பெயர்கள் சூட்டப்படுகின்றன.

இந்தி மொழியை மட்டும் திணிப்பது அரசியலுக்கு விரோதமான செயலாகும்.

மறைமுகமாகவும், நேரடியாகவும் இந்தியை திணிப்பதை மோடி அரசு கைவிட வேண்டும்.

இவ்வாறு கூறியுள்ளார்.