தேவையில்லாமல் பேசி சிக்கலை இழுத்துக்கொள்ள வேண்டாம் என ஹெச்.ராஜாவுக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தேவையில்லாமல் பேசி சிக்கலை இழுத்துக்கொள்ள வேண்டாம் என ஹெச்.ராஜாவுக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் எச்சரிக்கை விடுத்துள்ளார். முன்னதாக சீமான் தமிழனே இல்லை. அவர் உண்மையில் ஒரு மலையாளி. அவர் பேசுவதெல்லாம் பிதற்றல். சீமான் தமிழனே கிடையாது. அவர் இந்துவும் இல்லை கிறிஸ்டின். நான் சொல்லவில்லை அவர் உடனே இருந்த களஞ்சியமே சொல்லியிருக்கிறார் என்று ஹெச்.ராஜா கடுமையாக சாடினார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தேவையில்லாமல் பேசி சிக்கலை இழுத்துக்கொள்ள வேண்டாம் என ஹெச்.ராஜாவுக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: மலைக்குறவர் சமூகத்தினரை பழங்குடியினராக அறிவியுங்கள்... சீமான் வலியுறுத்தல்!!
இதுக்குறித்து பெசிய அவர், ஒரு பீகாரிய பார்ப்பனன் என்னைய பார்த்து மலையாளி என்று கூறுவதா? இவரை இங்க நடமாட விட்டது நாங்க செய்த தப்பு. ராஜாவிடம் சொல்லி வைத்துக்கொள்ளுங்கள். தேவையில்லாமல் பேசி சிக்கலை இழுக்காதீங்க என்று தெரிவித்துள்ளார். மேலும் அவரிடம் இந்தி திணிப்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த சீமான், இந்தியை திணிக்க முயற்சித்த போது, தமிழ்நாட்டில் தான் முதல்முறையாக புரட்சி வெடித்தது.
இதையும் படிங்க: ஓ.பி.ரவீந்திரநாத்தை கைது செய்ய வேண்டும்.! தங்க தமிழ் செல்வன் புகார் மனுவால் பரபரப்பு.. என்ன காரணம் தெரியுமா..?
இதுவரை மற்ற மாநிலங்கள் அமைதியாக இருந்துவிட்டன. அதற்கு காரணம், தமிழ் தான் உலகின் தொன்மையான மொழி. அதுமட்டுமல்லாமல், இந்திய மொழிகளின் தொன்மத்தை தமிழில் இருந்து அறியலாம் என்று பிரதமர் மோடியே பலமுறை பேசியுள்ளார். அந்த மொழியை காப்பதற்காக பலரும் உயிரிழந்தனர். இந்தியை கொண்டு வர வேண்டிய தேவை ஏன் உள்ளது. இந்தி நமது மாநில மொழி இல்லை. பல மொழிகள் இருந்தால் தான் இந்தியா ஒரே நாடாக இருக்கும். ஒரே மொழி என்றால், இந்தியா பல நாடுகள் பிறக்கும் என்று தெரிவித்தார்.
