Asianet News TamilAsianet News Tamil

மறுபடியும் திமுகவுக்கு வந்திடாதே தாயீ... கருணாநிதிக்காக மனம் வருந்திய குஷ்புவுக்கு எச்சரிக்கை..!

திமுக வில் இருந்திருந்தால் ஒருவேளை நீங்கள் இப்போது சமூகநலத்துறை அமைச்சராகி கூட இருந்திருக்கலாம்.

Dont come to DMK again, mother ... Warning to Khushbu who repented for Karunanidhi ..!
Author
Tamil Nadu, First Published Jun 3, 2021, 2:58 PM IST

நடிகை குஷ்புவை தனது மகளாகவே கருதி திமுகவில் அதிக இடம் கொடுத்தார் மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி. தமிழகம் முழுவதும் சுற்றி திமுகவுக்கு தீவிர பிரச்சாரம் செய்து வந்தார் குஷ்பு. அடுத்த கட்ட தலைவராவதற்கு குஷ்புவுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்கிற அவா கருணாநிதியிடமும் இருந்தது. Dont come to DMK again, mother ... Warning to Khushbu who repented for Karunanidhi ..!

கட்சியில் முக்கிய பொறுப்பு அவருக்கு கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், திமுகவில் சிலர் காட்டிய எதிர்ப்பால் அவர் கட்சியை விட்டு விலகி காங்கிரஸில் இணைந்தார். அங்கிருந்து இப்போது பாஜகவுக்கு சென்றுவிட்டாலும், கருணாநிதி இல்லாத வெற்றிடத்தை நினைக்காத நாளில்லை என்கிறார் குஷ்பு. கருணாநிதியின் 98வது பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு கட்சி தலைவர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.Dont come to DMK again, mother ... Warning to Khushbu who repented for Karunanidhi ..!

பாஜக பிரமுகரான குஷ்பு, ‘’நீங்கள் இல்லாத வெற்றிடத்தை நான் உணராத நாள் இல்லை. ஒரு நாள் கூட தவறாமல் அதை நினைக்கிறேன். ஒரு குரு என்பவர் கடவுளுக்கு மேலே. நீங்கள் என் சிறந்த ஆசிரியராக இருந்தீர்கள். உங்கள் ஆசீர்வாதம் எப்போதும் என் மீது பொழியும் என்று நான் நம்புகிறேன். மிஸ் யூ அப்பா.’’என்று குறிப்பிட்டிருக்கிறார் குஷ்பு. 

 

இதற்கு கருத்து தெரிவித்துள்ள திமுக அனுதாபிகள்,  ’’திமுக வில் இருந்திருந்தால் ஒருவேளை நீங்கள் இப்போது சமூகநலத்துறை அமைச்சராகி கூட இருந்திருக்கலாம். "செஞ்சோற்றுக் கடன்" தீர்க்க, சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்த குஷ்புவே..! இப்போது இருக்கும் கட்சி மனித நாகரிகத்திற்கு அப்பாற்பட்ட வஞ்சகமே நெஞ்சகமாய் வாழும் கீழ்மை மனிதர்களின் கலவையில் உருவானது.‌ அங்கு பகட்டு இருக்கும். மனிதப் பண்பு இருக்காது. சகோதரி, விரைவில் வெளியேறு’’ என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios