Asianet News TamilAsianet News Tamil

இது மட்டும் செய்தால் போதும் கொரோனாவை அசால்டாக கட்டுப்படுத்த முடியும்... மாஸ் காட்டும் ராமதாஸ்..!

கொரோனா வைரஸ் பரவலுக்கு பல காரணங்கள் உள்ளன. அவற்றில் முதல் காரணம் நாம் தான் என்பதை மறுக்க முடியாது.  அனைவரும் முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட விதிகளை பின்பற்றினால் அடுத்த 2 அல்லது 3 வாரங்களில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தி விட முடியும். 

Doing this is enough to control the corona... ramadoss
Author
Tamil Nadu, First Published Apr 23, 2021, 12:39 PM IST

பாதுகாப்பு விதிகளை நாம் முறையாக பின்பற்றினால் கொரோனா பாதிப்பில் உலகின் முதல் நாடாக இப்போது இருக்கும் இந்தியாவை , விரைவில் உலகின் கடைசி நாடாக கொண்டு செல்ல முடியும் என ராமதாஸ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- இந்தியாவின் தினசரி கொரோனா பாதிப்பு 3 லட்சத்து 16 ஆயிரம் என்ற உச்சத்தைக் கடந்து விட்டது.  கடந்த 24 மணி நேரங்களில் மட்டும் 2100-க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்து விட்டனர். கொரோனா பாதிப்பும், உயிரிழப்பும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் செல்கின்றன.

Doing this is enough to control the corona... ramadoss

கொரோனா வைரஸ் பரவலுக்கு பல காரணங்கள் உள்ளன. அவற்றில் முதல் காரணம் நாம் தான் என்பதை மறுக்க முடியாது.  அனைவரும் முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட விதிகளை பின்பற்றினால் அடுத்த 2 அல்லது 3 வாரங்களில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தி விட முடியும். ஆனால், நாம் அதை செய்வதில்லை. அதனால் தான் உலகிலேயே மிக அதிக அளவில் கொரோனா பாதிப்புக்கு உள்ளான நாடாக நாம் மாறியிருக்கிறோம்.

Doing this is enough to control the corona... ramadoss

இப்போதும் ஒன்றும் கைமீறிச் சென்று விட வில்லை. தேவையில்லாமல் வீடுகளை விட்டு வெளியில் செல்வதைத் தவிருங்கள். வெளியில் செல்லும் போது முகக்கவசம் அணியுங்கள். சமூக இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியில் சென்று வந்த பின்னர் கைகளை சுத்தம் செய்யுங்கள். பாதுகாப்பு விதிகளை நாம் முறையாக பின்பற்றினால் கொரோனா பாதிப்பில் உலகின் முதல் நாடாக இப்போது இருக்கும் இந்தியாவை , விரைவில் உலகின் கடைசி நாடாக கொண்டு செல்ல முடியும். கொரோனாவை கட்டுப்படுத்த நம்மால் முடியும்.... நம்மால் மட்டுமே முடியும் என ராமதாஸ் கூறியுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios